உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..!

புல்வாமா தாக்குதலுக்கு வெடிகுண்டு தயாரிக்க ஆன்லைனில் வாங்கப்பட்ட கெமிக்கல் பொருட்கள்.. என்.ஐ.ஏ அதிகாரிகள் தகவல்..

புல்வாமா தாக்குதலுக்கு வெடிகுண்டு தயாரிக்க ஆன்லைனில் கெமிக்கல் பொருட்களை வாங்கிய நபர், ஜெயிஷ் இ தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நபர் ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

pulwama

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி, சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நடத்திய இந்த பயங்கர தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக, ஸ்ரீ நகரை சேர்ந்த 19 வயதான வைஸ் உல் இஸ்லாம், புல்வாமாவை சேர்ந்த 32 வயதான முகமது அப்பாஸ் ராதர் ஆகிய இருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

இஸ்லாமிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பயங்கர வெடிப்பொருட்களுக்கு தேவையான, கெமிக்கல் பொருட்களை அமேசான் ஷாப்பிங்கில் வாங்கிக் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஜெயிஷ் இ தீவிரவாதிகளின் வழிகாட்டுதலின் படி, பாட்டரிக்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்கி, அதனை தீவிரவாதிகளுக்கு அனுப்பியுள்ளார்.

அதேபோல் முகமது ராதரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஜெயிஷ் ஐஇடி வெடிப் பொருட்கள் நிபுணர், முகமது உமர் காஷ்மீர் வந்த போது அவருக்கு அடைக்கலம் கொடுத்தது தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலைப் படை வீரர் அடில் அகமது தர் உள்ளிட்ட மற்ற தீவிரவாதிகளுக்கும் முகமது ராதர் அடைக்கலம் கொடுத்தது தெரியவந்துள்ளது.

pulwama

புல்வாமா தாக்குதல் தொடர்பாக கடந்த மாத இறுதியில் இருந்து ஷாகீர் பஷீர், தாரிக் அகமது ஷா, இன்ஷா ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது மேலும் இருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்பது நினைவுக்கூறத்தக்கது.

1newsnationuser1

Next Post

டெல்லி வன்முறை செய்திகளை ஒளிபரப்பிய 2 செய்தி சேனல்களுக்கு தடை.. எதிர்ப்புக்கள் வலுத்ததால் பின்வாங்கிய மத்திய அரசு..

Sat Mar 7 , 2020
டெல்லி வன்முறை குறித்து நேரலையில் செய்தி ஒளிபரப்பிய 2 மலையாள செய்தி சேனல்களின் ஒளிபரப்புக்கு 48 மணி நேரம் மத்திய அரசு தடை விதித்த நிலையில், அதற்கு எதிர்ப்புகள் வலுத்ததால் தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் ஆகிய செய்தி சேனல்கள், கேபிஸ் டிவி நெட்வொர்க் விதிமுறைகளை மீறியுள்ளதாக […]
asianet media one

You May Like