சென்னையில் தி.நகர் மற்றும் தாடண்டர் நகர் வழி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் கூகுள் பே, பேடிஎம் மூலம் கட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பொது பேருந்துகளை சில கட்டுபாடுகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேருந்து கட்டணங்களை இணையதள பரிவர்த்தனை மூலம் பெற ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக கூறினார்.
இதனை சோதனை செய்யும் விதமாக சென்னையில் தி.நகர் மற்றும் தாடண்டர் நகர் வழி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் கூகுள் பே, பேடிஎம் மூலம் கட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் சென்னை மாநகரில் உள்ள 300 பேருந்துகளில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.