கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்…

கொரோனா நிவாரணம்.. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் உதவ நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai_High_Court

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் அல்லது அரசியல் கட்சிகள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் நிதியாக இருந்தால், முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம் என்றும் அரசு அறிவித்தது.

அதுமட்டுமின்றி, சமைத்த உணவுகள், நிவாரணப்பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது என்றும், அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாக கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்திருந்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் கடந்த 13-ம் தேதி வழக்கு தொடரப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் திமுக கோரியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது பற்றி அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை எனவும் தகவல் தெரிவித்தாலே போதும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Food Distribution

மேலும் சில நிபந்தனைகளையும் அவர்கள் வழங்கினர். நிவாரண உதவிகள் வழங்க 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும் எனவும், 48 மணி நேரத்திற்கு முன்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். போதிய முன்னெச்சரிக்கையுடன் நிவாரண உதவி வழங்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

முன்னதாக நோய் பரவுதை குறைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மட்டுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் தன்னார்வலர்களுக்கு தடை எதுவும் விதிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிப்பு

Thu Apr 16 , 2020
சென்னை: மணலியில் இருந்து ஒடிசாவிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தடுத்து மீண்டும் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். நாடுமுழுவதும் இரண்டாம் கட்ட ஊரடங்கு வருகின்ற மே 3 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை மோசமாகி வருகின்றது. வாழ்வாதாரத்திற்காக இந்தியாவின் பல மாநிலங்களுக்கு தொழில் நிமிர்த்தமாக சென்ற தொழிலாளர்கள் சொந்த வீட்டினை விட்டு வாடகை வீட்டில் தான் இருந்துவருகின்றனர். தற்போது இந்த […]
migrant worker chennai

You May Like