ஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா..? ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்..! ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி..! ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்..! எங்கெங்கு லேசான மழை பெய்யும்..! அது ஒரு குப்பை "ஷோ"..! நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்..! பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா..? இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி..! இறுதியில் கணவன் செய்த காரியம்..! சுருளி அருவியில் குவியும் குப்பைகள்..! இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்..! கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை..! தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி..! அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு..! தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை..! வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை..! திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி..! ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு..! காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி..! அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்..! முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை..! பிரித்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

7 பேர் விடுதலையில் ஏன் இந்த முரண்பாடு..? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரிக் கேள்வி

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளான நளினி, முருகனை அவர்களின் உறவினர்களுடன் பேச அனுமதிக்க மறுப்பது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 தமிழக அரசுக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக நளினியின் தாய் பத்மா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் இருவரும் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி, முருகனின் தந்தை இறந்த போது கூட, அவரது உடலை வீடியோ காலில் பார்க்க தமிழக அரசு அனுமதி வழங்க மறுத்ததையும் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். இதனையடுத்து சிறைத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்தியாவில் இருக்கும் உறவினர்களிடம் மட்டுமே சிறைக்கைதிகள் பேச அனுமதி வழங்கப்படும் எனவும், வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் பேச சிறைவிதிகளில் அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, வழக்கை விசாரித்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், இந்தியாவுக்குள் உறவினர்கள், நண்பர்களுடன் பேச அனுமதிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால், வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச அனுமதிக்க முடியாது. எனினும், வெளிநாட்டில் லேண்ட் லைனில் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அவர்கள் வேறு மொழியில் பேசினால் எங்களால் தெரிந்துகொள்ள முடியாது” என்று வாதிட்டார்.

nalini n

இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் சரமாரிக் கேள்விகளை எழுப்பினர். அப்போது பேசிய நீதிபதிகள் “ நளினி, முருகன் தமிழர்கள்தானே? சட்டமன்றத்தில் 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன்? ஏன் இந்த முரண்பாடு? அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினர். இந்த வழக்கு தொடர்பாக அரசு நாளை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

1newsnationuser1

Next Post

சூரிய மண்டலத்திற்குள் நுழைந்த 900 ஆடி நீளமுள்ள ஹைட்ரஜன் பனிப்பாறை

Tue Jun 2 , 2020
900 அடி நீளமுள்ள ஹைட்ரஜன் நிரம்பிய பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவதை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒமுவாமுவா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், இது இயற்கையில் மிகவும் அரிதான ஒரு நிகழ்வு எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 900 அடி நீளமுள்ள இந்த பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவது இதுவே முதன்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சனி கிரகத்தின் சுற்று வட்டப்பாதை அருகே உள்ள […]
sddd 2

You May Like