வெளுத்துவாங்கும் கனமழை…தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்டா? ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..!

கொரோனா மரணங்கள்.. அடக்கம் செய்யும் நடைமுறைகளை தமிழக அரசு பின்பற்றுகிறதா..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பிரச்சனைகளில் ஈடுபட்டனர். மேலும் அவரது உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மருத்துவருக்கு ஏற்பட்ட இந்த அவலம் குறித்து பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இதனிடையே இதுகுறித்து தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ஏற்கனவே இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணா, நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு விதிமுறைகளை அரசு நடைமுறைப்படுத்தியதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கண்ணியமான நல்லடக்கம் என்ற உரிமை, புனிதமான மருத்துவ தொழில் செய்தவர்களின் உடலுக்கு வழங்கப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் கடமையை செய்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது ஐசிஎம்ஆர் வகுத்த வழிமுறைகள், நடைமுறைகளை தமிழக அரசு பின்பற்றுகிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இதுதொடர்பான விளக்கத்தை வரும் வெள்ளிக்கிழமை அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி வழக்கை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Chennai_High_Court

நாட்டின் பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. மேலும் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்ளின் உடல்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படுவதும், ஜே.சி.பி வாகனங்களில் எடுத்து செல்லப்படுவதும், காட்டுப்பகுதிகளில் தூக்கிவீசப்படும் அவலமும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து மாஸ்க், சானிடைசர் நீக்கம்... இனி வரப்போகும் ஆபத்து...

Wed Jul 8 , 2020
கொரோனா பரவல் காரணமாக அதிகம் பயன்பட்டு வந்த மாஸ்க் மற்றும் சானிடைசர் இரண்டையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கி நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் அறிவிப்பு வெளிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அனைவரும் மாஸ்க் மற்றும் சானிடைசர் பயன்படுத்துவது கட்டயப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து இந்த இரண்டின் தாயரிப்பும் விநியோகமும் இந்தியாவில் அதிகரித்தது. எனவே இது அனைத்து மக்களுக்கும் சேர […]
SanitizerMasks Lead

You May Like