மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் சென்ற இளைஞர்கள்…போலீசாரை தாக்கியதால் துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டர்…

திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில், பாஸ்ட்புட் கடையில், சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஊழியரை, உருட்டுக்கட்டையால் அடித்துவிட்டு தப்பி ஓடியவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

chennai police shoot

திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள பாஸ்ட்புட் கடையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்த அன்பழன் என்பவரது மகன் ஆகாஷ் (வயது 24) தனது நண்பர்கள் 5 பேருடன் சாப்பிட வந்துள்ளார். அதன்பின், சாப்பிட்டு பணம் தராமல் சென்றதால், அங்கு இருந்த ஊழியரான திருவள்ளூரை சேர்ந்த பாபு என்கிற சதீஷ்குமார் (23) என்பவர் சாப்பிட்டதற்கான பணத்தை கேட்டுள்ளார். ஆனால், பணம் தர முடியாது என்று கூறியதுடன், பாபுவை தகாத வார்த்தையால் பேசி உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடிவிட்டனர்.

இதனால், பலத்த காயமடைந்த பாபு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது தலையில் 25 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, பாபு திருவள்ளூர் டவுன் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார்கள், அவர்களை கண்டுபிடித்து பிடிக்க முயன்றனர். அப்போது ஆகாஷ் தப்பி ஓடிய நிலையில், திருவள்ளூரை அடுத்த மப்பேடு குன்னத்தூர் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ஆகாஷை சுற்றி வளைத்தனர்.

அப்போது வாகன டிரைவரும் போலீசுமான கலைவாணன் என்பவரை ஆகாஷ் உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு தப்பியோட முயன்றார். இதை பார்த்த இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தப்பியோட முயன்ற ஆகாஷை காலில் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் காயம் அடைந்த ஆகாஷை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா எதிரொலி.. 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி.. தமிழக அரசு அதிரடி..

Wed Mar 25 , 2020
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகல் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் 12 வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்த நிலையில், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு […]
கல்வித்துறை

You May Like