எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது?

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து… 24 டன் அளவிலான பாமாயிலை குடங்களில் பிடித்து சென்ற பொதுமக்கள்…

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே தடுப்பு சுவரில் டேங்கர் லாரி மோதிய விபத்தில் லாரியிலிருந்து கொட்டிய பாமாயிலை பொதுமக்கள் குடங்களிலும் பாத்திரங்களிலும் பிடித்து சென்றனர்.

chennai lorry accident

தமிழகம் முழுவதும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர பொதுமக்கள் யாரும் வெளியில் வர தடை விதிக்கப்பட்டது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து மேடவாக்கத்தில் உள்ள தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நோக்கி டேங்கர் லாரி ஒன்று நேற்று மதியம் புறப்பட்டு சென்றது. இதில் 24 டன்
அளவிலான பாமாயிலுடன் சென்று கொண்டிருந்த லாரி தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலத்தில் ஏறி கீழே இறங்கியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியதில் சாலை தடுப்பு சுவற்றில் லாரியின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டன.

மேலும், லாரி கவிழ்ந்து அதில் இருந்த பாமாயில் சாலையில் கொட்டி அருகே இருந்த தெருக்களில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் குடங்களையும், வீட்டில் இருந்த பாத்திரங்களையும் கொண்டு வந்து பாமாயிலை பிடிக்க தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனாம்பேட்டை உதவி கமிஷனர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் வந்தனர்.

தேனாம்பேட்டை, எழும்பூர், திருவல்லிக்கேணியில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர். முதற்கட்டமாக தீப்பற்றாமல் இருக்க லாரியில் இருந்த பேட்டரி அகற்றப்பட்டது. டீசல் முழுவதும் வெளியேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து டீசல் டேங்கில் ரசாயன நுரை பீய்ச்சியடிக்கப்பட்டது. பின்னர் சாலையில் ஆங்காங்கே தேங்கியிருந்த பாமாயிலை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழாமல் இருக்க உமியும், மணலும் கொட்டப்பட்டன.

இந்த விபத்தில் லேசான காயத்துடன் டிரைவர் முருகன் உயிர் தப்பினார். பின்னர் ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டு கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. சாலையில் கொட்டிய பாமாயிலை பயன்படுத்த வேண்டாம் என்று தீயணைப்பு வீரர்கள் அப்பகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டனர். இதனை பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் பாமாயிலை பாத்திரங்களில் எடுத்துச் சென்றனர். இந்த விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா பாதிக்காத 25 மாவட்டங்கள்.. மத்திய அரசின் பட்டியல்.. தமிழக மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளதா..?

Mon Apr 13 , 2020
கடந்த 14 நாட்களில் கொரோனா பாதிக்காத 25 மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே போல் நேற்று ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 273 லிருந்து […]
இன்று மட்டும் 817 பேருக்கு கொரோனா

You May Like