தமிழகமே…! வரும் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி…! வெளுத்து வாங்க போகும் கனமழை…!

இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி‌ குறிப்பில், ‘இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்குத்திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 10-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

கவனம் மக்களே...! நாளை வங்கிகள் இயங்காது...! எந்தெந்த மாநிலங்களில்...? முழு விவரம் இதோ...!

Mon Nov 7 , 2022
நாடு முழுவதும் நாளை 11 மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குருநானக் ஜெயந்தி, குர்புரப் என்றும் அழைக்கப்படுகிறது, இது சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாகும். முதல் சீக்கிய குருவான குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி கார்த்திகை மாதத்தில் பதினைந்தாவது சந்திர நாளான கார்த்திக் பூர்ணிமா நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது, மேலும் பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டியின்படி நாளை இது […]

You May Like