உஷாரா இருங்க மக்களே…! 31-ம் தேதி இடி மின்னலுடன் கனமழை…! யாரும் கடலுக்கு போக வேண்டாம்…!

இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும்.


நாளை மறுநாள் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 1-ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடைய கூடும். இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 31 மற்றும் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21முதல் 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 1-ம் தேதி வரை இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி.. பட்ஜெட்டில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு..

Sun Jan 29 , 2023
2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது… மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி காத்திருக்கிறது.. 7வது ஊதியக் குழு […]
money

You May Like