வரும் 9-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்…! மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை…!

கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 9-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும் மீனவர்களுக்காக எச்சரிக்கை ஏதுமில்லை வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்து மதத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வு கிடையாது - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Mon Feb 6 , 2023
இந்து மதத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வு கிடையாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரவீந்திர நாட்டிய மந்திர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர் நாம் ஒரு வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும்போது, ​​சமூகத்தின் மீது நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு வேலையும் சமூகத்தின் சிறந்த நன்மைக்காக இருக்கும்போது, எந்த வேலையும் எப்படி பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது […]

You May Like