தமிழகமே…! அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்…! வானிலை மையம் கணிப்பு.‌‌..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். கடலுக்கு மீன் பிடிக்கும் செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை‌. வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாரடைப்பால் காலமானார் சசிகாந்த் பவார்...! முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

Wed Feb 8 , 2023
அகில இந்திய மராத்தா கூட்டமைப்பின் தலைவரும், மராட்டிய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், மராத்தா இடஒதுக்கீடுக்காகவும் தொடர்ந்து போராடிய மூத்த தலைவருமான சசிகாந்த் பவார் காலமானார். அவருக்கு வயது 82. கொங்கனில் இருந்து வீடு திரும்பும் போது மாரடைப்பால் காலமானார். மராத்தா இடஒதுக்கீட்டிற்காக கடுமையாகப் போராடிய தலைவராக அறியப்பட்டாலும், அவர் எப்பொழுதும் எனது வாழ்க்கையில் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக குரல் கொடுப்பவராகவே அறியப்பட்டார். அவரது இழப்பு இயக்கத்தில் உள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

You May Like