சென்னையை சேர்ந்த அணு விஞ்ஞானி ஏற்கனவே டிசம்பர் மாதம் நடந்த சூரிய கிரகணத்துக்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கும் சம்பந்தம் இருபதாகவும் இனி வரபோகும் சூரிய கிரகணத்தில் வைரஸ் பரவலின் தீர்வு கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

சென்னையை சேர்ந்த நியுக்ளியர் அண்ட் எர்த் சயின்டிஸ்ட் டாக்டர் கே.எல். சுந்தர் கிருஷ்ணா கூறுகையில், “டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்ப்பப்பட்ட கொரோனா வைரஸ் பரவல் குறித்த எனது ஆய்வில் டிசம்பர் 26 அன்று நடந்த சூரிய கிரகணத்துக்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கும் சம்பந்தம் உள்ளது என தெரிகிறது.

சூரிய கிரகணத்தின் போது வெளியான ஆற்றல் நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் ஆற்றலை மறு சீரமைத்துள்ளது. இந்த ஆற்றல் பூமியின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாகவே கொரோனா வைரஸின் உயிர் மூலக்கூறு கட்டமைப்பில் பிறழ்வு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. வளிமண்டலத்தில் ஏற்படும் அணுசக்தி தொடர்பு, உயிரியக்கத்தின் கருவாக உள்ளது.

இதே போல் வரவிருக்கும் ஜூன் 21 அன்று நடைபெறும் சூரிய கிரகணத்தில் ஏற்ப்படும் அணு பிளவு ஆற்றல் மூலம் வைரஸ் செயலற்றதாக மாற வாய்ப்புள்ளது. இந்த வைரஸுக்கு சூரிய ஒளி மற்றும் சூரிய கிரகணமே தீர்வாக அமையும்” என கூறியுள்ளார்.