
சென்னை: சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்தே ராஜூவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளையும் சிகிச்சை வழங்குவதில் முதன்மையானதாகவும் விளங்கிவந்தார் மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி.கடந்த சில நாட்களாக அவர் விடுப்பில் சென்றிருந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து டீன் ஜெயந்தி அவரது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

கொரோனா வீரியம் அடைந்த நேரத்திலும் மருத்துவத்துறை பணியாளர்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளநிலையில் அவர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்படுவது அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ராஜூவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், யிற்சி மருத்துவர்கள் செவிலியர்கள் என 60-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.