தன் மனைவி தன் வீட்டின் முன் வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்ததால் விபரீதம் – துப்பாக்கியால் சுட்ட போலிஸ். உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..!

தூங்கிகொண்டிருந்த மனைவியின் தலையில் சுத்தியால் அடித்து கொலை… மனநலம் பாதிப்பால் நேர்ந்த விபரீதம்…

சென்னையில், ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் இருந்த கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில், தூங்கிகொண்டிருந்த மனைவியின் தலையில் சுத்தியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murderlogo

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டான்குளத்தைச் சேர்ந்தவர் ரவி (40). இவரின் மனைவி சாவித்திரி (38). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ரவி ஸ்டீல் பட்டறையில் வேலை பார்த்துவந்தார். சாவித்ரி, அதேபகுதியில் வீட்டு வேலைக்கு செய்துவந்துள்ளார். ஊரடங்கு காரணமாக சாவித்திரியின் மகனும் மகளும் அவரின் சகோதரி வீட்டுக்கு சாவித்திரி அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையில், சாவித்ரியும் ரவியும் மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளனர். ரவியின் அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த ரவியிடம் சாவித்திரி எங்கே என்று கேட்டுள்ளார் அதற்கு அவர் சற்றும் சலனமில்லாமல், சிரித்துகொண்டே தூங்கி கொண்டிருக்கிறாள் என்று கூறியுள்ளார். ரவியின் அம்மா உள்ளே சென்று பார்த்தபோது, சாவித்திரி ரத்த வெள்ளத்தில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

crime 1

உடனடியாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாவித்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், ரவியிடம் விசாரணை செய்ததில், அவளைக் நான்தான் கொலை செய்தேன் என்று சாதரணமாக கூறியுள்ளார்.

இதையடுத்து காவல்நிலையத்திற்கு ரவியை அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து, சாவித்திரி கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் சகோதரி சல்சா அழுது புலம்பியபடி, கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சாவித்திரிக்கும் ரவிக்கும் திருமணம் முடிந்து 17 ஆண்டுகள் ஆனதாகவும், 10நாட்களுக்கு முன்பு, மகனையும்,மகளையும் தன் வீட்டிற்கு வந்தபோது சாவித்திரி மிகுந்த மனவேதனையில் இருந்தார். நான் அவரிடம் கேட்டதற்கு, ரவி, சமீபகாலமாக வேலைக்குச் செல்லவில்லை என்றும், வீட்டிலேயே மது அருந்திவிட்டு குடிக்கப் பணம் கேட்டுஅடிப்பதாகவும் கூறினார்.

bangalore murder

ஆனால், சாவித்திரியை கொலை செய்வான் என்று நினைக்கவில்லை என்று புலம்பியுள்ளார். மேலும், தங்கை சாவித்திரியை அடித்துக் கொலை செய்த ரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்ததின் பேரில், ரவியை கைது செய்தனர். இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீஸார் கூறுகையில், ரவியை விசாரணை செய்ததில், ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ரவிக்கும் அவரின் மனைவி சாவித்திரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். ரவிக்கு தூக்கம் வரவில்லை. அதனால் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த சாவித்திரியின் தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என்று தெரிவித்தனர்.

மேலும், விசாரணையில் ரவிக்கு மனநலம் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால் அவரைக் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

சமோசா கேட்டு கட்டுப்பாட்டு அறைக்கு தொடர் அழைப்பு... சாக்கடையை சுத்தம் செய்த இளைஞர்...

Tue Mar 31 , 2020
உத்தரபிரதேச மாநிலத்தில், தனக்கு சமோசா வேண்டும் என்று கூறி காவலரை தொடர்ந்து தொந்தரவு செய்ததால் சாக்கடையை சுத்தம் செய்ய வைத்து போலீசார் நூதன தண்டனை வழங்கினர். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று, மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததையடுத்து, பொதுமக்கள் வசதிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஆம்பூரில் உள்ள ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு […]
uttarpradesh-samosa-calls-for-a-hearing-control-room Young man cleaning the sewer ...

You May Like