மருமகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்த நபர்.! வெட்டிப்போட்ட சகோதரி.!

சென்னை வியாசர்பாடியில் சென்ட்ரல் அவென்யூ சாலையில் 58 வயதான மருதுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 32 வயதில் மணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். மருதுபாண்டிக்கு அமிர்தம் என்ற சகோதரி இருக்கிறார்.

இந்த சகோதரி இளையான்குடி பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மணிகண்டனும் அமீர்தத்தின் மகள் ஷாலினியும் காதலித்தனர். ஆனால் இந்த காதல் சகோதரி அமிர்தத்திற்கு பிடிக்கவில்லை. எனவே அவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால் மருதுபாண்டி தனது மகன் மற்றும் மருமகள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்து திருமணம் செய்து வைத்து தனது வீட்டிலேயே வைத்து அவர்களை பார்த்துக் கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சகோதரி அமிர்தம் 5 பேரை அழைத்துக் கொண்டு வந்து மருது பாண்டியில் வீட்டில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி தகராறு செய்தார். தொடர்ந்து மருதுபாண்டியை வெட்டி இருக்கிறார்.

இதனால் காயமுற்ற மருதுபாண்டி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் வியாசர்பாடி சர்மா நகர் பகுதியில் சேர்ந்த கோபிநாத், சாகுல் ஹமீது உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தலைமுறைவாக இருக்கும் ஷங்கர், ராஜா, மற்றும் அமிர்தம் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Baskar

Next Post

ஸ்மார்ட்போன் வாங்க 4ஆம் வகுப்பு சிறுமி செய்த அதிர்ச்சி செயல்..!! அதிர்ந்துபோன மருத்துவமனை..!!

Wed Oct 19 , 2022
ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக 4ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் தனது ரத்தத்தை விற்க முயன்ற சம்பவம் மேற்குவங்கத்தில் அரங்கேறியுள்ளது. மேற்குவங்க மாநிலம் தாபானைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு சிறுமி ஒருவர், தனது கிராமத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலூர்காட் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறுமி அங்கு உள்ள ரத்த வங்கிக்கு சென்று ரத்தம் விற்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதை கேட்டு ரத்த வங்கியில் இருந்த […]
ஸ்மார்ட்போன் வாங்க 4ஆம் வகுப்பு சிறுமி செய்த அதிர்ச்சி செயல்..!! அதிர்ந்துபோன மருத்துவமனை..!!

You May Like