தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..!

தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்… தவறான சிகிச்சையால் இளம்பெண் பலி…

சென்னை தாம்பரத்தில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் தவறான் சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai death

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், சாமியார் கேட், சாய்பாபா கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் சங்கீதா (வயது 22). நீண்ட நாட்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்ததால், கடந்த மாதம் தாம்பரத்தில் உள்ள தீபம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், தொண்டையில் சதை வளர்ந்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்து அதை அகற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த மாதம் 20-ந்தேதி அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அறுவை சிகிச்சை முடிந்த அரை மணிநேரத்தில் சங்கீதா ரத்த வாந்தி எடுத்துள்ளார். தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்து சுயநினைவை இழந்தார். இது குறித்து சங்கீதாவின் தந்தை கிருஷ்ணன், டாக்டர்களிடம் கேட்டதற்கு அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையை சரிசெய்வதாக கூறியுள்ளனர்.

ஆனால், சிகிச்சை எதுவும் மேற்கொள்ளாமல், சங்கீதாவை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கிருஷ்ணனிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின பேரில், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், தாசில்தார் சரவணன் ஆகியோர் மருத்துவமனை சென்று ஆய்வு நடத்தினர்.

பின்னர் சங்கீதாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன், தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொண்ட தவறான சிகிச்சையால்தான் தனது மகள் உயிரிழந்ததாகவும், அந்த ஆஸ்பத்திரி மற்றும் தனது மகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணன் மீண்டும் தாம்பரம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, அறுவை சிகிச்சையினபோது டாக்டர்களின் கவனக்குறைவு காரணமாக இளம்பெண் இறந்தாரா என்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினர்.

1newsnationuser2

Next Post

ஊரடங்கின்போது மக்கள் வெளியில் செல்வதை தடுக்க நடமாடும் மளிகை கடைகள்... சென்னை மாநகராட்சி ஏற்பாடு...

Fri Apr 10 , 2020
கொரோனா வைரஸால் ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் வருவதை தடுக்கும் விதமாக 15 நாட்களுக்கு தேவைப்படும் 18 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய காம்போ பேக் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்களுக்காக ஏராளமானோர் வெளியில் வந்த வண்ணம் உள்ளனர். வெளியில் வராமல் இருக்க வாகனங்களை பறிமுதல் செய்வது, தண்டனை கொடுப்பது, […]
Organization of Chennai Corporation

You May Like