பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..!

160 ரூபாய்க்கு விற்ற சிக்கன் தற்போது 30ரூபாய் வரை சரிவு… நஷ்டத்தை சந்திக்கும் வியாபாரிகள்…

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சிக்கன் விலை மளமளவென சரிந்ததால் வியாபாரிகள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு நஷ்டத்தை சந்திக்கிறார்கள்.

corona chicken

உலகம் முழுவதும் பரவும் கோவிட்19 எனப்படும் கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடிய வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவையும் விட்டு வைக்காத கொரோனா பல்வேறு மாநிலங்களிலும் வேகமாக பரவிக் வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு வதந்திகளும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரவி வருகின்றன.

இதன் ஒரு அம்சமாக கோழி, ஆடு, மாடு, மீன் போன்றவற்றை சாப்பிட்டால் கொரோனா பரவுகிறது என்ற தவறான தகவலை பரவியதால், அசைவம் சாப்பிடுவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். எனினும், மாமிசம் சாப்பிடுவதால் கொரோனா பரவுகிறது என உறுதி செய்யப்படவில்லை எனவும், வெறும் வதந்தி மட்டுமே என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். மேலும், ஏதும் சந்தேகமாக இருந்தால் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வதந்தியால், அசைவ உணவகங்களில் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பிராய்லர் கோழிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

சிக்கன், மட்டன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், குறிப்பாக தமிழகத்தில் பிரியாணிக்கு புகழ்பெற்ற இடங்களாக ஆம்பூர், வாணியம்பாடி திகழ்கின்றன. இங்கெல்லாம் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் விலை ரூ.160 என விற்கப்பட்ட நிலையில், நேற்று ஆம்பூரில் ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் ரூ.30க்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், பிராய்லர் கோழிகளை பொறுத்தவரை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது. அதனால் உடனே விற்பனை செய்தாக வேண்டிய சூழலில் வியாபாரிகள் இருக்கின்றனர். இதே நிலை தமிழகம் முழுவதும் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

1newsnationuser2

Next Post

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. ஷாகீன்பாகில் அதிக மக்கள் கூடியுள்ளதால் பதற்றம்..

Sat Mar 14 , 2020
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், டெல்லி ஷாகீன்பாக்கில் சிஏஏவிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக டெல்லியில் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 68 வயதான மூதாட்டி வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். ஏற்கனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என்றும் […]
shaheen bagh protest

You May Like