அசத்தல்…! பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவி தொகை இரண்டாம் கட்ட திட்டம்…! இன்று தொடக்கம்… எப்படி விண்ணப்பிப்பது…?

“புதுமைப் பெண்” இரண்டாம் கட்ட திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் , அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” இரண்டாம் கட்ட திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 மாணவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

கலை மற்றும் அறிவியல் கல்வியில் இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டும், பொறியியல் கல்வியில் இளநிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவியர்கள் penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மாணவிகள் பதிவு செய்யலாம். மேலும் இது குறித்து கூடுதல் விபரங்களை 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

Vignesh

Next Post

தொண்டையை பாதிக்கும் பப்பாளி... ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!

Wed Feb 8 , 2023
பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால், தொண்டைக்கு சேதம் விளைவிப்பதோடு, உணவு குழாயை சுருங்க செய்யும் என்று ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. பப்பாளி பழத்தில், வைட்டமின் ஏ முதல் வைட்டமின் பி, சி, ஈ மற்றும் வைட்டமின் கே உள்ளிட்ட கலோரிகள், கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. மருத்துவ குணங்கள் நிறைந்த பப்பாளி, நீரிழிவு, புற்றுநோய், சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ஆனால் இதை அளவிற்கு அதிகமான […]

You May Like