வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா?

அவமரியாதை செய்த தமிழக தலைமைச் செயலாளர்!!! புகார் அளித்த திமுக எம்.பிக்கள்… 24ஆம் தேதி விசாரணை… மாஸ் காட்டும் திமுக!!!

மனு அளிக்கச் சென்ற தங்களை அவமரியாதையாக நடத்தியதாக தலைமைச் செயலாளர் சண்முகம் மீது திமுக எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர்.

ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் மாநிலம் முழுக்க கொரோனா நிவாரண உதவிகளை திமுக வழங்கி வந்தது. மொத்தம் 17 லட்சம் மனுக்களை மக்களிடம் பெற்றதாக குறிப்பிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முக்கியமான ஒரு லட்சம் மனுக்களை அரசுக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தார்.


அதன்படி, கடந்த மே மாதம் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோர் தலைமைச் செயலாளரை சந்தித்து தங்களுக்கு வந்த மனுக்களில் ஒரு பகுதியை வழங்கினார் இந்த சந்திப்பு சுமூகமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

99008576 111141353945723 7347875310362165248 n

இது தொடர்பாக திமுக தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், (13.5.2020) மாலை 5.00 மணி அளவில் சென்னையை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், கலாநிதி மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் தளபதியின் ஒன்றிணைவோம் வா வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அரசு உதவி கோரி ஒரு லட்சம் மக்கள் சமர்ப்பித்த கொரோனா கொள்ளை நோய் நிவாரண மனுக்களை ஒப்படைத்தனர்.

இவர்கள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லால் முன்னாள் மத்திய அரசின் கேபினட் அமைச்சர்களாக பல்லாண்டுகள் பதவி வகித்தவர்கள். இவர்களுக்கான குறைந்தபட்ச வரவேற்பு முறைகளைக்கூட அங்கு பின்பற்றவில்லை. இருப்பினும் கழக எம்.பி.க்கள் கழகத் தலைவரின் நேரடி பார்வையில் செயல்படுத்தப்படும் ஒன்றிணைவோம் வா செயல் திட்டம் பற்றி விளக்கியதோடு இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பல்லாயிரம் மனுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தனர்.

இது தொடர்பாக அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் அளித்து உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தலைமைச் செயலாளர் சண்முகம் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் கவனம் செலுத்தினார்.

கலாநிதி எம். பி.யின் வேண்டுகோளை ஏற்று, பேச்சு வார்த்தைக்கு இடையூறாக இரைச்சலுடன் ஒலித்துக் கொண்டிருந்த டி.வி.யின் ஒலியளவை குறைக்கச் சென்ற ஊழியரையும் தடுத்து விட்டார், டி.ஆர்.பாலு, மனுக்கள் மீதான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டியதின் அவசியத்தையும் அவசரத்தையும் சுட்டிக் காட்டினார். இதற்கு பதிலளித்த தலைமை செயலாளர் சண்முகம் போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில் மனுக்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்லமுடியாது என்று கூறினார்.

மேலும், ‘திஸ் ஈஸ் தி ப்ராப்ளம் வித் யூ பீப்பிள்’ ( உங்களை போன்ற ஆட்களிடம் இது தான் பிரச்சனை) என்று உரத்த குரலில் கூறினார். இருப்பினும், கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புறப்படும் முன் மீண்டும் தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்களிடம், ‘சார், தயவு செய்து விரைந்து நடவடிக்கை எடுங்கள். கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரசின் உதவிக்கு தவித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று டி.ஆர்.பாலு கூறினார். தமிழக மக்களுக்கு நிவாரண உதவி பெற்றுத்தர வேண்டுகோள் விடுக்க சென்ற கழக பாராளுமன்ற உறுப்பினர்களை கண்ணியக் குறைவாக நடத்திய தலைமைச் செயலாளர் சண்முகம் உடனடியாக வருத்தமும் மன்னிப்பும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், இப்பிரச்சினையை நாடாளுமன்ற உரிமைக்குழுவுக்கு எடுத்துச் சென்று தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறப்பட்டிருக்கிறது.

images 99

இந்நிலையில் இன்று இந்த சம்பவம் குறித்து திமுக சார்பில் தலைமைச் செயலாளர் சண்முகம் மீது திமுக எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர். திமுக எம்.பி.க்கள் புகார் தொடர்பாக விசாரிக்க மக்களவை உரிமைக் குழு செப்டம்பர் 24-ஆம் தேதி கூடுகிறது.

Newsnation_Admin

Next Post

காதலுடன் இருட்டில் ஒதுங்கிய பள்ளி சிறுமி..! அதனை நோட்டமிட்ட இரண்டு இளைஞர்கள் செய்த காரியம்..!

Sat Sep 19 , 2020
கன்னியாகுமரியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் அருகில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு பேப்பர், பேனா வாங்க போகிறேன் என பெற்றோரிடம் கூறி விட்டு தன் காதலனை சந்தித்துள்ளார். இருவரும் ஆள்நடமாட்டம் இல்லாத சற்று இருட்டான பகுதிக்குள் சென்றுள்ளனர். அதனை நோட்டமிட்ட […]
தூங்கச் சென்ற மாமியாரை தூக்கிப்போட்டு கற்பழித்த மருமகன்..! பரோட்டா மாஸ்டரின் பலான பின்னணி..!

You May Like