
நெல்லையில் பெற்ற தாயே வறுமையின் காரணமாக, தன் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்றது விசாரணையில் தெரியவந்ததையடுத்து போலீசார் அப்பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசிக்கு அருகே உள்ள ஆலங்குலத்தில் தனது கணவர் கணேசனோடு வசித்துவந்தார் ரோஷ்லின். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கணவனை பிரிந்து தனது ஒன்றரை வயது குழந்தையுடன் சொந்த ஊரான வீரவநல்லூரில் தனியாக வசித்து வந்தார் ரோஷ்லின். கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்தமையாலும், ஒன்றரை வயதான குழந்தையை வைத்து கொண்டு எந்த பணிக்கும் செல்லமுடியாமல் தவித்து வந்துள்ளார் ரோஷ்லின்.
இதற்கிடையில் தான் பிரிந்து சென்ற கணவர், பல மாதங்களுக்கு பிறகு தன்னுடைய குழந்தையினை காண்பதற்காக நேரில் வந்துள்ளார். அப்போது குழந்தையினை எங்கே எனக்கேட்ட போது முரண்பாடான தகவல்களை சொல்லிவந்துள்ளார் ரோஷ்லின். இறுதியில் குழந்தையினை யாரோ கடத்தி சென்றுவிட்டதாகவும் தேடி பார்த்தப்போது கிடைக்கவில்லை எனவும் கணவரின் தெரிவித்தார்.

ஏன் இதுக்குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என தெரிவித்த கணேசன், உடனடியாக காவல்நிலையத்திற்கு சென்று குழந்தையினை காணவில்லை என புகார் அளித்துள்ளார். போலீசார் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தான், ரோஷ்லினிடம் தன்னுடைய விசாரணையை தொடங்கிய போலீசார் அதிர்ச்சியில் உரைந்தனர். அப்போது குழந்தையை தாயே விற்றது அம்பலமாகியது.
மேலும் இதுக்குறித்து விசாரித்த போது, வறுமையின் காரணமாக உறவினர் சுரேஷ்குமார் உதவியுடன் பள்ளக்கால் புதுக்குடியை சேர்ந்த குமாரிடம் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது பல பேரிடம் விற்பனைக்காக சென்ற குழந்தை தற்போது சென்னையில் உள்ளது.
இதனையடுத்து குழந்தையினை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மேலும் குழந்தையை விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட ரோஷ்லின்,குமார் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.