மிளகாய்பொடி தூவி வழிப்பறி… மனைவி கண்முன்னே கணவன் கொலை!!

மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் மீது மிளகாய் பொடி தூவி கொலை செய்துவிட்டு வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நெக்குண்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிரமாத்தைச் சேர்ந்த தாமு(25) என்பவர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அனுராதா (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் தன் அம்மாவீட்டுக்கு சென்றுவிட்டு மாமியார் வீட்டுக்கு இருவரும் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கும்பல் திடீரென பைக்கை நிறுத்தி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழற்றிக்கொடுக்க கேட்டனர். இதற்கு மறுத்ததால் இருவர் மீதும் மிளகாய் பொடி தூவியுள்ளனர். இருவரும் நிலைகுலைந்த நலையில் கழுத்தில் இருந்த நகைகளை பறிக்க முயன்றனர்.

இதற்கு விட்டுக்கொடுக்காமல் தாமு போராடினார். சத்தம்போட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்தார். ஆனால் அந்தக் கும்பல் தாமுவை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பியது. இதில் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்து உயிரைவிட்டார் தாமு. கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் ஆன நிலையில் மனைவி கண்முன்னே துடிதுடித்து தாமு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளத.

தகவல் அறிந்து வந்த புங்கனூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வழக்குப் பதிவு செய்து தப்பிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Next Post

பெரும் சோகம்..!! கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் லீ ஜிகான் மரணம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி

Tue Nov 1 , 2022
கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல கொரியன் பாப் இசை பாடகர் லீ ஜிகானும் மரணமடைந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தென்கொரிய தலைநகர் சியோலில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது உலக நாடுகளை அதிர வைத்தது. இந்த ஹாலோவீன் திருவிழாவில் அதிகப்படியான இளம் பெண்கள், குழந்தைகள், முதியோர் பங்கேற்றது தெரியவந்த […]
பெரும் சோகம்..!! கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் லீ ஜிகான் மரணம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி

You May Like