புதுடில்லி:நாட்டின் எல்லைக்குள் சீனா நுழையவில்லை என பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

லடாக் பகுதியல் இந்தியா சீனா இடையேயான பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி இன்று 19 ம்தேதி )அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதன்படி வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டின் எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை. இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.
சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை.நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது. நமது நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைககளை நமது ஆயுதப்படை மேற்கொள்ளும் .ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், எல்லைகளை பாதுகாக்க, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். அதே போன்று நமது ஆயுதப்படைகளின் தேவைகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் என எதுவாக இருந்தாலும், அதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இவ்வாறு மோடி பேசினார்