ரூ.2.40 கோடி மதிப்புள்ள சொகுசு காரை தீயிட்டு கொளுத்திய யூடியூப் பிரபலம்..! மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..!

அடங்க மறுக்கும் சீனா.. நேபாள எல்லையை ஆக்கிரமித்து, 9 கட்டிடங்களை சட்டவிரோதமாக கட்டி வருவதால் அதிர்ச்சி…

நேபாளத்தின் ஹம்லாவின் லாப்சா-லிமி பகுதியில் சட்டவிரோதமாக 9 கட்டிடங்களை கட்டுவதன் மூலம் சீனா அந்நாட்டின் பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளது.

சீனா

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 வரை ஹம்லாவைச் சேர்ந்த உதவி தலைமை மாவட்ட அதிகாரி தல்பஹதூர் ஹமால் சமீபத்தில் நடத்திய விசாரணையில் நேபாள எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்தது தெரியவந்துள்ளது. சீனாவால் கட்டப்பட்டு வரும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களின் தகவல்களை உள்ளூர்வாசிகள் தெரிவித்ததையடுத்து உதவி அதிகாரி அந்த இடத்தை பார்வையிட்டார்.

அந்த கட்டிடங்களை தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது என்றும், சீனாவால் அங்கு கட்டப்படும் ஒரு கட்டிடம் பற்றிய தகவல்கள் தங்களுக்கு வந்ததையடுத்து, அங்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் நேபாள உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள எல்லையில் சீனா அத்துமீறுவது இது முதன்முறையல்ல.. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம், தங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க சீனா திபெத்தில் சாலை கட்டுமானத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் எதிர்காலத்தில் எல்லை புறக்காவல் நிலையங்களை நிறுவக்கூடும் என்று நேபாள அரசு தெரிவித்திருந்தது.

926192 china and nepal

நேபாளத்தின் வேளாண் துறை அமைச்சகத்தின் எடுத்த சர்வே படி, சீனா சுமார் 33 ஹெக்டேர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 10 இடங்களை ஆக்கிரமித்துள்ளது, மேலும் அதன் நிலப்பரப்பை அதிகரிக்க ஆறுகளின் ஓட்டத்தையும் திசை திருப்பி வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் தனது சாலை வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக சீனா நேபாளத்தை நோக்கி பாயும் ஆறுகளின் போக்கை மாற்றியுள்ளது.

அந்நாட்டின் அரசின் இந்த அறிக்கைக்கு பின்னர், எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ், பிரதமர் கேபி ஷர்மா ஓலி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை மீண்டும் கொண்டு வருமாறு வலியுறுத்தியது, ஆனால் இதுவரை பிரதமர் இந்த விவகாரம் குறித்து எதுவும் கூறவில்லை.

மேலும் இதுதொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், தோலகா, ஹம்லா, சிந்துபால்சவுக், கோர்கா மற்றும் ரசுவா போன்ற பல்வேறு மாவட்டங்களின் 64 ஹெக்டேர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியது.

NEPAL MAP 1

இதனிடையே நாடு கடத்தப்பட்ட திபெத்திய அதிபர் லோப்சாங் சங்கே, 1960-களிலேயே சீனா குறித்து நேபாளம் மற்றும் பிற ஆசிய நாடுகளை எச்சரித்தார். அதாவது திபெத்தை ஆக்கிரமிப்பதன் மூலம் லடாக், நேபாளம், பூட்டான், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற 5 பகுதிகளையும் சீனா ஆக்கிரமிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்திருந்தார். சங்கே கூறியது போலவே, இமயமலை பகுதிகளை சமீபத்தில் சீனா ஆக்கிரமிக்க முயல்வதால், இந்தியா – சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை...

Mon Sep 21 , 2020
இந்தியா-சீனா இடையே, லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் படைகளை குவித்து வருகின்றன. இதனால் அங்கு தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது. அதே நேரம் அங்கு அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் மாஸ்கோவில் இருநாட்டு வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எல்லையில் படைகளை திரும்ப பெறுவது மற்றும் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமல்படுத்துவது […]
லடாக்கில்

You May Like