திணறும் சென்னை அணி… 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.. இந்த முறையும் போராடும் டூபிளெஸ்ஸிஸ்… சென்னை அணியை பயமுறுத்திய ப்ரித்திவ் ஷா… வெற்றியை தக்கவைக்குமா டெல்லி? இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா!!! இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. "கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்..! தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை..! “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்..! “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்..! பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்..! கடனை வசூலிக்க அதிரடி..! என்ன தான் நடக்குது ஐபிஎல் தொடரில்..? மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…! ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்..! அம்பானியின் அடுத்தக்கட்ட அதிரடி..!

வங்கதேசத்தை வளைக்கும் சீனா: தொடர்ந்து நட்பு நாடுகளை இழக்கும் இந்தியா

வங்கதேசத்திலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் 5161 பொருள்களுக்கு 97 % வரி விலக்கு அளித்திருக்கிறது சீனா. வங்கதேசத்துக்கு அளித்திருக்கும் இந்த ஜாக்பாட் சலுகை மூலம் வங்கதேசத்துடனான உறவைச் சீனா மேலும் வலிமைப்படுத்தியிருக்கிறது.

1592656145196

இந்தியா – சீனாவுக்கு இடையே லடாக், கால்வன் பள்ளத்தாக்கில் பிரச்னை நீடித்து வருகிறது. ஜூன் 15 – ல் நடந்த கைகலப்பில் இரு தரப்பிலும் மரணம் நிகழ்ந்தது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, காலாபாணி ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து தன்னிச்சையாக புதிய வரைபடத்தைத் திருத்தி அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றத்தை மேற்கொண்டது, நேபாளம். தனது ராணுவ வீரர்களை இந்திய எல்லைப் பகுதியில் குவித்து வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் எல்லைப் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைத்தல், ராணுவ முகாம்களை அமைக்கும் பணியில் நேபாளம் ஈடுபட்டு வருகிறது . இந்த சூழலில் பாகிஸ்தான் நிலை பற்றி சொல்லவே வேண்டாம்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, எடுத்த ராணுவ நடவடிக்கையால் வங்கதேசம் எனும் புது நாடு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து உதயம் ஆனது. அப்போதிருந்து, வங்கதேசம் இந்தியாவுக்குத் தவிர்க்க முடியாத நட்பு நாடாக விளங்கி வருகிறது. இந்நிலையில், நேபாளத்தை நமக்கு எதிராக திருப்பியது போல, வங்க தேசத்தையும் இந்தியாவுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

1592657027112786

கொம்பு சீவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சீனாவுடன் வங்கதேசம் வர்த்தகம் செய்யும் 5,161 பொருள்களுக்கு 97 % வரி விலக்கு அளித்திருக்கிறது சீனா. இது குறித்து வங்க தேசம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜூன் 16 – ம் தேதியன்று சீன நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு 97 % வரி விளக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது ஜூலை 1 – ம் தேதி முதல் அமலுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, வங்கதேசம் ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையில் 3095 பொருள்களுக்கு வரிச்சலுகை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சீனா அளித்திருக்கும் புது சலுகை மூலம் மொத்தம் 8256 பொருள்களுக்கு வங்கதேசம் வரிச் சலுகை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

1592656190697

ஜூன் 15 – ல் இந்தியாவும் சீனாவும் மோதிக்கொண்ட நிலையில் அடுத்த நாளே வங்கதேசத்துக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது சீனா. இதன்மூலம் டாக்கா – பெய்ஜிங் இடையேயான உறவு மேலும் வலுப் பெற்றிருக்கிறது. வங்கதேசத்தையும் சீனா கைக்குள் போட முயற்சிப்பது இந்தியாவுக்கு தலைவலியாகவே அமையும்.
ஏற்கெனவே பாகிஸ்தான், நேபாளம் ஆகியவற்றை இந்தியாவுக்கு எதிராகத் திருப்பியிருக்கும் சூழலில் வங்கதேசத்தையும் இந்தியாவுக்கு எதிராக மாற்றும் சீனாவின் ராஜதந்திர நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

1newsnationuser4

Next Post

நாளைய சூரிய கிரகணம்: யாருக்கு என்ன பரிகாரம்

Sat Jun 20 , 2020
10 ஆண்டுகளுக்குகு ஒருமுறை நிகழும் கங்கண சூரிய கிரகணம் நாளை நடைபெற உள்ளது. இது சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் அமையலாம். அப்படி எதிர்மறையாக அமைபவர்களுக்கான சில பரிகாரங்களை காணலாம். பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் – பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய […]
சூரிய கிரகணம்

You May Like