கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

1 இல்ல.. 2 இல்ல.. 21 நாடுகளுடன் எல்லை பிரச்சனை செய்யும் சீனா..! இத மட்டும் தான் வேலையாவே வைச்சுருபாங்க போல..!

இந்திய சீன எல்லை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததாலும், இந்தியா சமீபத்தில் திறந்து வைத்த பாலங்கள் மற்றும் சாலைகள் போன்ற கட்டுமான பணிகளாலும் அதிருப்தியில் உள்ள சீனா எந்த நேரமும் போருக்கு தயாராக இருக்கும்படி தனது இராணுவ வீரர்களுக்கு கட்டளை கொடுத்துள்ளது.


இந்தியாவுடன் தான் சீனாவிற்கு எல்லை பிரச்சனையா என்று கேட்டால் இல்லை. இந்தியா, தைவான், ரஷ்யா, ஜப்பான், வியட்நாம் உட்பட 21 நாடுகளுடன் எல்லை பிரச்சனை செய்து வருகிறது சீனா. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே 3,488 கி.மீ நீளமுள்ள எல்லை உள்ளது, இதில் சீனா பல இந்திய பகுதிகளை உரிமை கோருகிறது. உதாரணமாக லடாக் நிலத்தை 38,000 சதுர கிலோமீட்டர் (அக்சாய் சீனா) சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இது திபெத்-சின்ஜியாங்கை இணைக்கிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தை 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஆக்கிரமித்துள்ளது. 1962 முதலே இந்திய சீன எல்லை பிரச்சை பதற்றமான சூழலிலேயே சென்று கொண்டிருக்கிறது.

202009040709167236 224 Chinese Processors Ban China upset by Indias digital SECVPF

தென் சீனக் கடலில் ஜப்பானுடன் சீனாவுக்கு தகராறு உள்ளது. ஜப்பானை சேர்ந்த பகுதியான சென்காகு தீவை சீனா தனது என சொந்தம் கொண்டாடுகிறது.

வட கொரியா சீனாவுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டுள்ளதுஅனாலும் பாயகுடு மலை மற்றும் ஜியாண்டாவோ பகுதி தொடர்பாக சர்ச்சை உள்ளது. வரலாற்று அடிப்படையில் வட கொரியா அது தனக்கு சொந்தமான பகுதி எனக் கூறி வருகிறது. இரு நாடுகளும் 1416 கி.மீ நீளமுள்ள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த எல்லை இரண்டு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு சீனக் கடலில் தென் கொரியாவுடன் சீனாவும் தகராறு செய்து வருகிறது.

1969 ல் ரஷ்யா-சீனா நாடுகளுக்கு இடையே ஒரு எல்லை போர் நடந்துள்ளது. சீனா ரஷ்யாவுடனான இரண்டாவது மிக நீண்ட எல்லையை 4,300 கிலோமீட்டரில் பகிர்ந்து கொள்கிறது, சீனா 160,000 சதுர கிலோமீட்டர் ரஷ்ய நிலப்பரப்பைக் தனது பகுதி என கூறி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரத்தை தனது சொந்தமான பகுதி என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவும் நேபாளமும் 1,415 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கின்றன, இது 1961 ஒப்பந்தத்தின்படி வரையறுக்கப்பட்டுள்ளது. 1788 முதல் 1792 வரை சீன-நேபாளப் போருக்குப் பின்னர் கூட, நேபாளத்தின் சில பகுதிகளை சீனா தனக்கு சொந்தமான பகுதி என கூறி வருகிறது. சீனா நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரத்தை உரிமை கொண்டாடுகிறது. மேலும் 5 ஜி நெட்வொர்க் கருவிகளை அங்கு நிறுவ தயாராகி வருகிறது.

சீனாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான புதிய தகராறு கிழக்கு பூட்டானில் உள்ள சாடெங் வனவிலங்கு சரணாலயம் தொடர்பானது. இரு நாடுகளும் சுமார் 470 கி.மீ எல்லையை 495 சதுர கி.மீ பரப்பளவில் பகிர்ந்து கொள்கின்றன.

வியட்நாமின் பெரும்பகுதியை சீனா வரலாற்று அடிப்படையில் தனக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. மேக்ரிஸ்ஃபீல்ட் கரை, பாரசெல் தீவுகள், தென் சீனக் கடல் மற்றும் ஸ்ப்ராட்லி தீவுகளின் பகுதிகள் மீது இரு நாடுகளுக்கும் அதிகாரம் உள்ளது. வியட்நாம் பல நூற்றாண்டுகளாக சீனாவின் கீழ் இருந்தது, இதன் விளைவாக இரு நாடுகளுக்கு இடையே பல மோதல்களும் போர்களும் ஏற்பட்டன.

தென்சீனக் கடலில் உள்ள சில கடலோர தீவுகள் புருனேவுக்கு சொந்தமானவை. இருப்பினும், அதனை தனக்கு சொந்தம் கொண்டாடுகிறது. அதில் முக்கியமாக ஸ்ப்ரைட்லி தீவு அடங்கும்.

சீனா தைவான் முழுவதும் தனக்கு தான் சொந்தம் என உரிமை கோருகிறது, ஆனால் மேக்டிஸ்பீல்ட் கரை, பார்சல் தீவுகள், ஸ்கார்பாரோ ஷோல், தென் சீனக் கடலின் பகுதிகள், ஸ்ப்ராட்லி தீவுகள் ஆகியவை தொடர்பாக சர்ச்சை உள்ளது

சீனா மற்றும் கஜகஸ்தான் ஆகியவை 1,700 கி.மீ நீளமுள்ள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. கஜகஸ்தான் நாடு,சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் உள்ள பகுதியாகும். கஜகஸ்தானின் பல பகுதிகளை சீனா தனக்கு தான் சொந்தம் என கூறுகிறது.

இந்தியாவுக்கு அடுத்து, சீனா அதிகம் பிரச்சனை செய்யும் பகுதி தென் சீன கடல் பகுதி. இது இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூருடன் இது தொடர்பாக தகராறு செய்து வருகிறது.

இவை போக திபெத், மங்கோலியா, லாவோஸ், மியான்மர், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் என பல நாடுகளுடன் சீனா எல்லை பிரச்சனையில் இருந்து வருகிறது. இதில் எத்தனை நாடுகளுடன் சீனா போர் தொடுக்கும் என்பது கேள்விக்குறி தான் எனினும் தன் எல்லையை விரிவுப்படுத்த சீனா பல முயற்சிகளை செய்து வருகிறது.

1newsnationuser5

Next Post

உ.பி.யில் தாயை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம்..! காட்டுப்பகுதியில் இருந்து மீட்பு..!

Sat Oct 17 , 2020
உத்திரபிரதேசம் மாநிலம் ஜலான் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயைப் பார்க்க செல்லும் வழியில் 11 ஆம் வகுப்பு மாணவியை இரண்டு ஆண்கள் கடத்தி, வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். குற்றம் சாட்டபப்ட்ட இருவருமே இறுதியில் தங்கள் பேஸ்புக் புகைப்படத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர். இருவரும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கைது செய்யப்பட்டனர் என்று ஜலான் போலீஸ் சூப்பிரண்டு யஷ்வீர் சிங் தெரிவித்தார் இரண்டு பேரும் தன்னை காட்டுக்கு […]
5bcc780a18c773037cff75f7

You May Like