இந்திய சீன எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்து வருவதை தொடர்ந்து சீனாவை போருக்கு தயாராகும் படியும், வீரர்களை குவிக்கும்படியும் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரல் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கல்வான் மோதலுக்கு பின் இந்திய சீன எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகும் சூழலில் இரு நாடுகளும் தங்கள் வீரர்களை குவித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவின் இராணுவப்படையும், விமானப்படையும் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் இந்த சூழலில் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரலும் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் சீனாவை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ” இந்திய சீன பிரச்சனை இப்போது சரியாகாது. இது தற்போது சரியாகாது. இதற்கு சீனா எப்போதும் தாயாராக இருக்க வேண்டும். இந்தியாவை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியாவை முதல் ஆளாக தாக்க வேண்டும். நமது எல்லைகளை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும். இதற்காக வீரர்களை அங்கு குவித்து ரோந்து பணியில் அயாரது ஈடுபட வைக்க வேண்டும்.

இந்தியாவை கட்டுப்படுத்தும் வகையில் நமது திட்டங்கள் இருக்க வேண்டும். இரு நாடுகளுமே அணு ஆயுதப்படையில் நன்கு தேறியவர்கள். எனவே போர் ஆரம்பிக்கும் முன் எல்லைகளில் ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்தியா அத்துமீற வாய்ப்புள்ளது. எனவே சீனா எல்லைகளை விட்டுக்கொடுக்க கூடாது. சீனாவின் கூடாரங்களை இந்தியா அகற்றுவதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். பேச்சு வார்த்தை என்பது இனி இல்லை. எனவே சீனா போருக்கு தயாராக வேண்டும்” என சீன அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.