சசிகலா உடல்நிலை எப்படி உள்ளது..? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்.. தடுப்பூசியால் ஏற்படும் அடுத்தடுத்த மரணங்கள்.. ஹரியானாவில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி… சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடியாது.. விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட தகவல்.. சசிகலா அதிமுகவில் இணைந்தாலும், இணையாவிட்டாலும் பிரச்சனை என்னமோ முதல்வருக்கு தான்.. பரபரக்கும் அரசியல் களம்.. "சசிகலாவுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு வேறு விதமா யோசிக்க வைக்குது.." சீமான் கருத்து.. ஒரு லாஜிக் வேணாமா..? வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு எதுக்கு பாஸ்டேக் கட்டணம்..? யானை மீது எரியும் டயரை வீசிய மனித மிருகங்கள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.. கமல்ஹாசனின் கழுத்தில் மிதிக்கும் பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் பத்ரகாளி புகைப்படத்தால் சர்ச்சை… ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு.. எப்போது முதல் தெரியுமா.? பறவைக் காய்ச்சல் அபாயம்..! எவை செய்யலாம்.. எவை செய்யக்கூடாது..! அரசு வெளியிட்ட நெறிமுறைகள் இதோ..! அதிர்ச்சி..! பிரபல வங்கி லாக்கரில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணம் கரையானுக்கு விருந்தான சோகம்..! அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது ஸ்மார்ட்போன்..! விலையை கேட்டா அசந்து போயிருவீங்க..! 90ஸ் கிட்ஸ் கனவு கன்னி சிம்ரனின் மகனா இது..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! சித்ராவின் கணவர் ஹேம்நாத் சைக்கோவை விட கொடூரமானவர்.. நண்பர் வெளியிட்ட பகீர் தகவல்கள்..

ராணுவ வீரர்கள் யாரும் மாயமாகவில்லை என கூறிய மத்திய அரசு : 10 இந்திய வீரர்களை சீனா விடுவித்துள்ளதாக தகவல்..

ராணுவ வீரர்கள் யாரும் மாயமாகவில்லை என கூறிய மத்திய அரசு கூறியிருந்த நிலையில், 10 இந்திய வீரர்களை சீனா விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

india china n
“..

இந்திய – சீன எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த 15-ம் தேதி இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 76 இந்திய வீரர்கள் சீன ராணுவத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். படுகாயமடைந்த 18 பேர், உள்ளிட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில், மிக மோசமான மோதலாக இது பார்க்கப்படுகிறது. இதனையடுத்து எல்லையில் நீடிக்கும் பதற்றத்தை தணிக்க, இரு நாட்டு உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, 2 மேஜர்கள் உட்பட 10 இந்திய வீரர்களளை சீன ராணுவம் நேற்று மாலை விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக, எந்த ராணுவ வீரரும் மாயமாகவில்லை என்று இந்திய ராணுவம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் 10 இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்துள்ளதாக வெளியாகி உள்ள செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர்கள்

1967-ம் ஆண்டில் இந்திய – சீன எல்லையான நாது லா என்ற இடத்தில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 80 பேர் தங்கள் உயிரை நீத்தனர். சீன தரப்பிலோ 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். அதற்கு பிறகு இருநாடுகளுக்கு இடையே மோசமான தாக்குதலாக கல்வான் தாக்குதல் கருதப்படுகிறது.

1newsnationuser1

Next Post

சீன இராணுவத்திலிருந்து விலகினால் என்ன தண்டனை தெரியுமா???

Fri Jun 19 , 2020
உலகின் மிகப்பெரிய இராணுவம் தன்னிடம் இருப்பதாக சீனா கூறுகிறது. ஆனால் சீன இராணுவத்தின் செயல்பாடு என்ன, அவர்கள் எந்தக் கொள்கையில் செயல்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? கிழக்கு லடாக்கில், இந்தியா-சீனா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு இடையே கடந்த மாதம் முதல் மோதல்கள் ஏற்பட்டது. இதனால் மே 5 முதல் இரு இராணுவப் படைகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்தது. சீன இராணுவம் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்திய எல்லையைக் கைப்பற்ற முயன்றது. சுமார் […]
maxresdefault

You May Like