"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்.. புரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து… இந்தியாவில் இந்த ஒரு தேன் மட்டும் தான் கலப்படமில்லாத தேன் – ஜெர்மன் ஆய்வக சோதனை முடிவு

‘சீன வைரஸே திரும்பி போ’ : கொரோனாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜக எம்.எல்.ஏ..!!

‘கொரோனாவே போ, போ’ என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஏற்கனவே முழக்கமிட்ட நிலையில், தற்போது பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ‘சீன வைரஸே திரும்பி போ’ என்று கூறியுள்ளார்.

bjp mla raja singh

கொரானா பரவுதலை தடுக்கும் விதமாக மத்திய அரசு 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒருமைப்பாட்டை நிரூபிக்கும் விதமாக நேற்று இரவு நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் மின் விளக்கை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி, தீபங்களை ஏற்றினர்.

திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஒற்றுமை தீபங்களை ஏற்றி, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இன்னும் ஒரு சிலரோ, பட்டாசு வெடித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் இப்படி பட்டாசு வெடித்து கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

fire crackers

இந்நிலையில் தெலங்கானாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங், நடத்திய கொரோனாவுக்கு எதிராக வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அவர் கையில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்றார்.

மேலும் ‘சீன வைரஸே திரும்பிப் போ’ என்ற முழக்கங்களையும் அவர் எழுப்பினார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

சமூக விலகலை மக்கள் கடைபிடிக்க வேண்டும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் இந்த நேரத்தில், மாஸ்கை கூட முறையாக அணியாமல் கூட்டத்துடன் பாஜக எம்.எல்.ஏ போராட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இதே போல் ‘கொரோனாவே திரும்பி போ’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரானா: பிரதமர் மருத்துவமனையில் அனுமதி..

Mon Apr 6 , 2020
கொரானா வைரஸ் தாக்கத்தால், இங்கிலாந்து பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 10 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட சோதனையில், கோரானா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த போரிஸ், வீட்டில் இருந்தவாறே தனது அலுவலக பணிகளையும் மேற்கொண்டார். அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலமாக, தனது உடல்நிலை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெரிவித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவர் […]
boris johnson

You May Like