‘சிங்காரி’ என்ற இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலியை தற்போது வரை ஒரு லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

சீனாவின் டிக்டாக் செயலி பலரையும் அடிமையாக்கி வைத்திருந்தது. சிறியவர்கள் முதல் வயதானோர் வரை தங்கள் திறமைகளை காட்ட இந்த செயலியை மணிக்கணக்காக பயன்படுத்தி வந்தனர். இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள இந்தியா சீனாக்கு இடையிலான மோதல் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தையும் பாதித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் பெங்களூரை சேர்ந்த புரோக்ராம் வடிவமைப்பாளர்கள் பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதமன் ‘சிங்காரி’ என்ற செயலியை வடிவமைத்துள்ளனர். இந்த செயலில் வீடியோ பதிவுவேற்றம், பதிவிறக்கம் செய்வதுடன் சேட்டிங் வசதியும் உள்ளது.

மேலும் புதிய நண்பர்களுக்கு மெசெஜ் அனுப்பவும், நகைச்சுவை வீடியோக்கள், சினிமா பாடல்கள், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வீடியோக்கள், தத்துவ வாக்கியங்கள், மீம்ஸ் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்யலாம். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், வங்க மொழி, மராத்தி, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி, மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் இதனை பயன்படுத்த முடியும்.