வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

பெண்கள் தினம் வரும்.. போகும்.. ஆனால் பெண்களுக்கான நீதி..? வைரமுத்து, ராதாரவி, கார்த்தி என ஒருவரையும் விட்டுவைக்காத சின்மயி..

பெண்கள் தினம் வரும், போகும், ஆனால்.. பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்று கூறியுள்ள சின்மயி வைரமுத்து, ராதாரவி, கார்த்தி, அனு மாலிக் என பலரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


கடந்த 2018-ம் ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை பாடகி சின்மயி முன்வைத்தார். எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த, வைரமுத்து தன் மீதான புகாருக்கு காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். எனினும் வைரமுத்து குறித்த எந்த செய்தி வந்தாலும், அதற்கு ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார் சின்மயி.

vairamuthu chinmayi

இந்நிலையில் 90-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்திய வழக்கில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்த செய்தியை நெட்டிசன் ஒருவர் பதிவிட, அதற்கு பாடகி சின்மயி தொடர் ட்வீட்கள் மூலம் பதிலளித்துள்ளார். அவரின் பதிவில் “13-க்கும் மேற்பட்ட பெண்கள் புகாரளித்துள்ளனர். தன் மீது யாரும் கேள்வி எழுப்பினாலோ அல்லது பாலியல் புகாரளித்தாலோ அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது ராதாரவி தடை விதிப்பார். பாலிவுட் இசையமைப்பாளர் அனுமாலிக் பொது இடத்தில் வைத்தே 6க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சின்மயி வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில் “ பாடகர் கார்த்தி, சுவிட்சர்லாந்தில் உள்ள பாடகி உட்பட 7 பெண்களிடம் அத்துமீறியுள்ளார். அதுகுறிந்து மீ டூ குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்படுவதற்கு முன்பே, சம்மந்தப்பட்ட அந்த பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும், கார்த்தி மீது சினிமா துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில் “ பெண்கள் கேள்விக் கேட்கக் கூடாது, புகாரளிக்க கூடாது, பதிலடி கொடுக்க கூடாது என்று அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. அப்படியே புகாரளித்தால் கூட, ஏன் இப்போது, ஏன் தாமதமாக கூறுகிறீர்கள் என்று சில பெண்களே நமக்கு எதிராக மாறிவிடுவார்கள்.

பெண்கள் தினம் வரும் போகும்.. ஒரு நாளைக்கோ அல்லது ஒரு வாரத்திற்கோ பெண்களை கொண்டாடுவார்கள், ஆனால் வருடத்தின் மீதமுள்ள எல்லா நாட்களில் பெண்களுக்கான நீதி எந்த துறையிலும் கிடைப்பதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

பெண் சிசுக் கொலை தமிழகத்தின்பண்பாட்டுப் பெருமைக்கு அவமானம் - மு.க.ஸ்டாலின் வேதனை

Fri Mar 6 , 2020
பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பு ள்ளநேரி கிராமத்தில் அரங்கேறிய பெண்சிசுக்கொலை குறித்து தனது கருத்தினை மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். அதில் புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது. இந்த கண்டனத்திற்குரிய […]
ஜெ. அன்பழகனை

You May Like