கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்து வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானவர்தான் நடிகை அஞ்சலி.நடிகை அஞ்சலி தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்னர் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
தமிழ் திரை துறையில் கடந்த 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக அறிமுகமான அஞ்சலிக்கு அதன் பிறகு சில வருடங்களுக்கு பின்னர் அவருடைய நடிப்பில் வெளியான அங்காடி தெரு திரைப்படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.
அந்த திரைப்படத்திலிருந்து அடுத்தடுத்து அவர் நடித்த தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, இறைவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முக்கிய கதாநாயகியாகவும் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாகவும் வலம் வந்தார்.
ஆனால் சில வருடங்களுக்கு பிறகு அவர் தமிழ் திரையுலகிலிருந்து காணாமல் போனதாகவே சொல்லப்பட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு எந்தவிதமான பட வாய்ப்பு அமையவில்லை.
இதற்கிடையில், நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஒருவருக்கும் இடையில் காதல் உண்டாக இருவரும் மிக விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் ஒரு சில காரணங்களை முன்வைத்து அவர்கள் பிரிந்து தங்களுடைய சினிமா பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் நடிகை அஞ்சலி சமீபத்தில் ஒரு பேட்டியை வழங்கினார். அந்த பேட்டியில் நடிகை அஞ்சலி டாக்சி ரிலேஷன்ஷிப் தொடர்பாக உரையாற்றினார். அதில் அவர் ஒரு நபருடன் உண்டான உறவினால், தன்னுடைய கரியரை கவனிக்க இயலாமல் போய்விட்டது. ஆகவே அந்த உறவு தவறான உறவு என்று தான் வெளியே வந்து விட்டதாக கூறியிருக்கிறார் நடிகை அஞ்சலி.