fbpx

குழந்தைகளை கவர வந்துள்ளது… பிரபுதேவாவின், ‘மை டியர் பூதம்’-திரைவிமர்சனம்..!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபுதேவா. எப்பொழுதும் பிரபுதேவாவின் படங்களில் குழந்தைகளை கவர்ந்திழுக்கும் சிறப்பம்சமும் இருக்கும். தற்போது பிரபுதேவா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மை டியர் பூதம். இந்த படம் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ரம்யா நம்பீசன், அஸ்வந்த், சம்யுக்தா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மஞ்சப்பை, கடம்பன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராகவன் இயக்கி இருக்கிறார். டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு குழந்தைகளுக்கான படமாக மை டியர் பூதம் இன்று திரையரங்கிற்கு வந்துள்ளது. பிரபுதேவாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் மை டியர் பூதம், நிச்சயமாக குழந்தைகளின் மனதை கவரும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த தலைமுறையில் உள்ள குழந்தைகளை கவரும் வகையில், மை டியர் பூதம் வெளிவந்துள்ளது. அலாவுதீன் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் கதையம்சம், புத்துக்குள் முனிவர் ஒருவர் தியானம் செய்து கொண்டு இருக்கும்போது, அங்கு பிரபுதேவாவின் மகன் செல்வதால் முனிவரின் தியானம் கலைந்துவிடுகிறது. இதனால் கோபமடைந்த முனிவர் பிரபுதேவாவின் மகனுக்கு சாபம் விட தயாராகிறார். அதை அறிந்து கொண்ட பிறப்பு தேவா முனிவரிடம் போராடி அந்த சாபத்தை தான் வாங்கிக் கொண்டு பொம்மையாக மாறிவிடுகிறார்.

அதன் பிறகு அந்த பொம்மையில் இருந்த பூதத்தை திருநாவுக்கரசு( அஸ்வந்த்) விடுவிக்கிறார். தேவையான விஷயங்களை செய்யும் பூதமாக பிரபுதேவா நடித்துள்ளார். மீண்டும் பழையபடி மாறி தனது உலகத்துக்கு சென்று மகனுடன் சேர்ந்து வாழ பிரபுதேவா விரும்புகிறார். ஆனால், அதற்காக திருநாவுக்கரசு ஒரு விஷயம் செய்ய வேண்டும். அதை செய்தாரா? மீண்டும் பிரபுதேவா தன் மகனுடன் சேர்ந்தாரா, இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படத்தில் பூதம் கர்க்கியாக பிரபுதேவா நடித்துள்ளார். குழந்தைகள் இந்த படத்தை ஜாலியாக குதூகலத்துடன் கண்டு மகிழ்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. பெரியவர்கள் பார்க்கும் வகையிலும் சில விஷயங்களை இயக்குனர் படத்தில் கொண்டு வந்துள்ளார்.

பிரபுதேவா இந்த படத்திற்காக மொட்டை போட்டு நடித்துள்ளார். சாதாரணமாகவே பிரபுதேவாவை குழந்தைகள் ரசிக்கும் அளவிற்கு அவரது குறும்புத்தனங்கள் இருக்கும். இந்த படத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று, பிரபுதேவா தன்னுடைய காமெடி நடிப்பின் மூலம் கவர்ந்துள்ளார். அஸ்வந்த் இந்த படத்தில் திக்குவாய் பிரச்சனை உள்ளது போல் நடித்துள்ளார். அஸ்வந்த், பிரபுதேவாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக உள்ளது.

அம்மா கதாபாத்திரத்தில் ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். படத்தில் என்ஜாய் பண்ணுவதற்கான விஷயங்கள் மற்றும் எமோஷனல் என அனைத்தையும், படத்தில் கொண்டு வந்துள்ளார் இயக்குனர். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் திரை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. சில இடங்களில் லாஜிக் குறைபாடுகள் உள்ளதை தவிர்த்து, இந்த படம் குழந்தைகளை கவரும் என்பதில் ஐயமில்லை. குழந்தைகளுக்கான என்டர்டெயின்மெண்ட் படமாக உள்ளதால், மை டியர் பூதம் குழந்தைகளை மகிழ்விக்கும் பூதமாக இருக்கும்.

Baskar

Next Post

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது என்ன? விரிவான அறிக்கை தர காவல்துறைக்கு உத்தரவு..!

Thu Jul 14 , 2022
அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன் ஓபிஎஸ் தரப்பினர் நுழைந்ததை போலீசார் தடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதாடிய எடப்பாடி […]

You May Like