fbpx

விஜய் போட்ட கண்டிஷன்..!! நொந்து போன வெங்கட் பிரபு..!! அவரு இல்லாம எப்படி..?

வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த கஸ்டடி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து அங்கு தனக்கென ஒரு இடத்தை பிடிக்க நினைத்த அவர் இப்போது மீண்டும் தமிழுக்கே திரும்பும் அளவுக்கு படத்தின் வசூல் சரிவை சந்தித்திருக்கிறது. இந்நிலையில் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைய இருக்கிறார் என்ற செய்தி தான் இப்போது இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் விஜய், அட்லீ உட்பட சில இயக்குனர்களிடம் அடுத்த படம் குறித்து விவாதித்து வந்தார்.

ஆனால், இப்போது வெங்கட் பிரபு தான் விஜய்யை இயக்கப் போகிறார் என உறுதிப்பட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது பல வருடங்களுக்கு முன்பே பேசப்பட்ட கூட்டணி ஆகும். எப்படியென்றால், வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கடந்த 2011ஆம் ஆண்டு கொடுத்தார். அப்போதே விஜய் அவரை தன் வீட்டிற்கு வரவழைத்து மனதார பாராட்டி இருக்கிறார். மேலும், அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு என்னை நடிக்க கூப்பிட்டு இருக்கலாமே என்று சாதாரணமாக கேட்டது வெங்கட் பிரபுவை கடும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது. அப்போதுதான் விரைவில் நாம் இணையலாம் என்ற வாக்குறுதியையும் விஜய் கொடுத்துள்ளார். ஆனால், அதற்கு அவர் ஒரு முக்கியமான கண்டிஷனை போட்டிருக்கிறார்.

அந்த விஷயம் தான் வெங்கட் பிரபுவின் மனசை சுக்குநூறாக உடைத்திருக்கிறது. என்னவென்றால் நாம் இணையும் படத்தில் பிரேம்ஜி மட்டும் நடிக்கக் கூடாது. அது உன் பொறுப்பு தான், பார்த்துக்கோ என்று சிரித்தபடி ஜாலியாக கூறினாராம். ஏனென்றால் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதற்கு ஏற்ப வெங்கட் பிரபு கதையில்லாமல் கூட படம் எடுத்து விடுவார், ஆனால் தம்பி இல்லாமல் படம் எடுக்கவே மாட்டார். அந்த அளவுக்கு அவர் தன் தம்பியை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து விடுவார். அதைத்தான் விஜய் இப்படி ஜாலியாக கூறியிருக்கிறார். இருந்தாலும் விஜய் கூறியதற்கு வெங்கட் பிரபு என்ன முடிவெடுப்பார் என்று தெரியவில்லை. அந்த வகையில், அடுத்ததாக இணைய போகும் இவர்களின் கூட்டணியில் பிரேம்ஜி இருப்பாரா, மாட்டாரா என்ற ஒரு சந்தேகம் இப்போது அனைவருக்கும் எழுந்துள்ளது.

Chella

Next Post

பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணம்……! தனியார் பள்ளிகளுக்கு மாநில அரசு விடுத்த கடும் எச்சரிக்கை……!

Tue May 16 , 2023
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில்தான் தமிழக அரசின் கமிட்டி கட்டணம் நிர்ணயித்த பின்னர் தான் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தனியார் பள்ளி இயக்குனரகம் அறிவுறுத்தி இருக்கிறது. தமிழக அரசால் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த குழுவின் இந்த வருடத்திற்கான கட்டண நிர்ணயம் அறிவிக்கப்படும் முன்னதாக மாணவர்களிடம் கட்டணம் […]
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக்கம்...! எப்போது தெரியுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

You May Like