fbpx

’திமிரு’ பட வில்லியை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி ஆளே மாறிட்டாங்கன்னு பாருங்க..!!

தமிழ் சினிமாவில் கடந்த 2002ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமுராய்’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீயா ரெட்டி. இதைத்தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் இவர் நடித்திருந்த வில்லி கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டு கவனத்தையும் ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து வெயில், காஞ்சிவரம் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த 2008ஆம் ஆண்டு விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் விஷாலின் தோரணை, வெடி உள்ளிட்ட படங்களையும் ஸ்ரேயா ரெட்டி தயாரித்துள்ளார். இவர் தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் ‘சலார்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்த படத்தில் தன்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கு தங்க நாணயங்களை ஸ்ரேயா ரெட்டி பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

கடலை மிட்டாய் எலும்புகளை வலுப்படுத்துமா…?

Wed Sep 13 , 2023
தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றாக இன்றளவும் கடலை மிட்டாய் இருந்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பாத நபர்களே இல்லை. அந்த விதத்தில், இன்றளவும் இந்த கடலை மிட்டாய் சுவை அனைவரின் நாவிலும் நடனமாடும் ஒன்றாக, இருக்கிறது. அந்த வகையில், இன்று கடலை மிட்டாய் சாப்பிடுவதால், உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த கடலை மிட்டாயின் நார்ச்சத்து, புரோட்டின், விட்டமின், இரும்புச்சத்து கால்சியம் […]

You May Like