சினிமாவில் வில்லங்கமான கதாபாத்திரத்தில் நடித்தால் ஈஸியாக பிரபலம் ஆகிவிடலாம் என்பது பலரும் அறிந்ததே. அப்படி சினிமாவில் விபச்சாரியாக நடித்து சர்ச்சையில் சிக்கிய நடிகைகளைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அனுஷ்கா
சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் வானம். இதில் அனுஷ்கா ஷெட்டி விபச்சாரியாக நடித்திருந்தார். இப்படத்தில் சரோஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா. இப்படம் வெளியான போது அவரது கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.
சங்கீதா
சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஜி ஷிவா இயக்கத்தில் வெளிவந்த தனம் என்கிற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார்.
சினேகா
நடிகை சினேகா, குடும்பப் பாங்கான கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றவர். இவரும் விபச்சாரியாக நடித்திருந்தார் என்பது பலருக்கும் அதிர்ச்சியளித்த ஒரு விஷயம் தான். செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் தான் சினேகா அப்படி ஒரு வில்லங்கமான கேரக்டரில் நடித்திருப்பார்.
ரம்யா கிருஷ்ணன்
பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக மிரட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி ஹிட் ஆன பஞ்ச தந்திரம் மற்றும் தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் விபச்சாரியாக நடித்திருந்தார்.
சதா
ஷங்கரின் அந்நியன் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் சதா. இவருக்கு ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறையத்தொடங்கியதை அடுத்து சட்டென டார்ச் லைட் என்கிற திரைப்படத்தில் விபச்சாரியாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், அப்படம் பிளாப் ஆகிவிட்டது.
அஞ்சலி
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமானவர் அஞ்சலி. கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ரோசாப்பூ என்கிற படத்தில் விபச்சாரியாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரித்விகா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டிலையும் தட்டிச் சென்றார். இவர் டார்ச்லைட் என்கிற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார்.
புவனேஸ்வரி
சின்னத்திரை நடிகையாக வலம்வந்த புவனேஸ்வரி, ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் விலை மாதுவாக நடித்திருந்தார். படத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும் காட்சி என்பதால் அக்காட்சியில் விபச்சாரியாக நடித்ததாக புவனேஸ்வரி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அனசுயா பரத்வாஜ்
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் வில்லியாக நடித்து மிரட்டியவர் தான் அனசுயா பரத்வாஜ். இவர் சமீபத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த விமானம் திரைப்படத்தில் விபச்சாரியாக நடித்திருந்தார்.