தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த ’இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழ் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார். ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது, மாமன்னன், தசரா, போலா ஷங்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி வரும் நிலையில், தனக்கு பாலியல் தொல்லை சினிமாவில் நேர்ந்தால் எப்படி நடந்து கொள்வேன் என வெளிப்படையாக கூறி கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுவரை எனக்கு பாலியல் தொல்லை எதுவும் நேர்ந்ததில்லை. அப்படி ஒரு எண்ணத்தில் இதுவரை யாரும் என்னை நெருங்கியதும் இல்லை. ஆனால், என்னிடம் சில நடிகைகள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக கூறியுள்ளனர். ஒருவேளை, எதிர்காலத்தில், அது போல் யாராவது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் அப்படிபட்ட பட வாய்ப்பே எனக்கு வேண்டாம் என கூறி விடுவேன். சினிமாவே தேவையில்லை என வேறு வேலை கூட பார்க்க சென்று விடுவேன் என அதிரடியாக கூறியுள்ளார்.