விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் தான் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கக் கூடிய சூப்பர் சிங்கர், ஸ்ராட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையே இவர், கடந்த 2014ஆம் ஆண்டு, விஜய் டிவியில் பணிபுரிந்து வந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில மாதங்களிலேயே பிரவீனை விவாகரத்து செய்து விட்டு பிரியங்கா தனிமையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், ”நம்மை புரிந்துக்கொள்ளும் கணவர் இருந்தால் அவருக்காக நாமும் விசுவாசமாக இருந்தால் வாழ்க்கையில் அனைத்துமே சாத்தியமாகும்” எனத் தெரிவித்து மறைமுகமாக பிரியங்கா கணவரைப் பிரிய காரணமும் அவர்களுக்கிடையிலான புரிந்துணர்வு இன்மை தான் எனக் கூறியுள்ளார்.