fbpx

Jailer | ‘ஜெயிலர்’ ஓடிடி வெளியீடு..!! எப்போது தெரியுமா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு, விநாயகன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதற்கிடையே, ஜெயிலர் திரைப்படம் வசூலிலும் சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், உலக அளவில் ரூ.350 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் செப்டம்பர் 7ஆம் தேதி சன் நெக்ஸ்ட் மற்றும் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மக்களே..!! இரண்டு நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை அல்ல... கொளுத்தி எடுக்கும் வெயில்..!! எச்சரிக்கும் வானிலை மையம்..!!

Wed Aug 16 , 2023
இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது […]

You May Like