fbpx

வசூலில் சாதனை படைக்கும் ’பொன்னியின் செல்வன்’..!! 2 நாட்களில் இவ்வளவு கோடியா..?

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகின் 60 ஆண்டுகால கனவை, இயக்குநர் மணிரத்னம் சாத்தியமாக்கியிருக்கிறார். 5 பாகங்கள் கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, அதுவும் 150 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படம், கோலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது 2 நாட்களில் உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

வசூலில் சாதனை படைக்கும் ’பொன்னியின் செல்வன்’..!! 2 நாட்களில் இவ்வளவு கோடியா..?

குறிப்பாக, அமெரிக்காவில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல்நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 25.86 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய இந்தப் படம், ஒட்டுமொத்தமாக 78.29 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்தது. இதில், வெளிநாடுகளில் மட்டும் 34.25 கோடி ரூபாய் முதல் நாள் வசூலாக இருந்தது. முன்பதிவு டிக்கெட்களிலேயே ‘பீஸ்ட்’ படத்தை அடுத்து வசூலை ஈட்டிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், தற்போது ஒருவாரகாலத்திற்கு 90 சதவிகித டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், வரும் நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால் கூடுதல் வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

’மின்விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்தினால்’..!! மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழிசை எச்சரிக்கை..!!

Sun Oct 2 , 2022
புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவுத் தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள காமராஜர் சிலைக்கு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். அப்போது, மனித சங்கிலி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிர்ப்பு […]

You May Like