fbpx

காதலியை மறக்காத பிரபுதேவா..!! அட குழந்தைக்கே அந்த பெயர் தான் வெச்சிருக்காராமே..!!

இந்தியத் திரையுலகில் முன்னணி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் பிரபுதேவா. இவருடைய நடனத்துக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். தனுஷின் மாரி படத்தில் வரும் ரவுடி பேபி பாடலுக்கு இவர் நடனம் அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், இந்த பாடல் மட்டும் இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது.

நடிகர் பிரபுதேவா 1995ஆம் ஆண்டு ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் இருக்கிறார்கள். இதில் முதல் மகன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, குடும்பத்தின் மீது விரக்தியில் இருந்த பிரபு தேவா நயன்தாரவை காதலித்து வந்தார். இருவரும் லிவ்விங் டூ ரிலேஷன் ஷிப்பில் இருந்து வந்தனர். அப்போது நயன்தாரா, பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சைகுத்தி இருந்தார். இது அப்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இது பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரிய பிரச்சனையாக வெடித்த நிலையில், பிரபு தேவா ரமலத்தை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதன் பின் நயன்தாராவை பிரபு தேவா திருமணம் செய்து கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து, 2020ஆம் ஆண்டு பிரபுதேவா பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபுதேவா முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த போது, அவருக்கு ஹிமானி சிங் தான் சிகிச்சை அளித்து வந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடுத்து பெண் வீட்டினர் சம்மதத்துடன் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரபுதேவாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தனது பெண் குழந்தைக்கு நயன்தாரா என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட இணையவாசிகள் இது தான் காதலுக்கு மரியாதை கொடுப்பதா என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், சிலர் இதற்கு வாய்ப்பே இல்லை என்றும், யாரோ சிலர் கொளுத்தி போட்ட வதந்தி என்று பிரபு தேவாவுக்கு நெருக்கமான சில நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More : வாய்ப்புக்காக ஆபாசப் படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிடும் நடிகைகள்…!! அம்மா அம்மா என்று சொல்லிவிட்டு இப்படி செய்வதா..?

English Summary

While Prabhu Deva has given birth to a beautiful baby girl, it is reported that she has named her baby girl as Nayanthara.

Chella

Next Post

இஸ்ரேல்-லெபனான் எல்லையில் 600 இந்திய வீரர்கள்..!! அமைதியை நிலை நாட்டும் பணியில் இந்தியா..

Wed Sep 25 , 2024
600 Indian Soldiers Deployed on Israel-Lebanon Border Amid Escalating Tensions: India's Role in the Peacekeeping Mission

You May Like