லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’தளபதி 67’ படத்தின் மெயின் வில்லன் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது ’தளபதி 67’ பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. நேற்று இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில், தளபதி 67 படத்தின் மெயின் வில்லன் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சஞ்சய் தத் தான் தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் சஞ்சய் தத்.
இதுகுறித்த அறிவிப்பு போஸ்டரில், தளபதி 67 கதை கேட்டு சஞ்சய் தத் என்ன சொன்னார் என்பதை பதிவிட்டுள்ளனர். அதன்படி “தளபதி 67 படத்தின் ஒன் லைன் கேட்டதுமே இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த பயணத்தை தொடங்க ஆவலோடு உள்ளேன்” என்று சஞ்சய் தத் கூறினாராம். நடிகர் சஞ்சய் தத் கடைசியாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் 2 படத்தில் ஆதீரா என்கிற கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் அவர் ’தளபதி 67’ படத்தில் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தளபதி 67 திரைப்படத்தில் பிரியா ஆனந்த் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.