fbpx

பிரபல தயாரிப்பாளரை மறுமணம் செய்த சீரியல் நடிகை மகாலட்சுமி..! திருப்பதியில் டும் டும் டும்..!

பிரபல நடிகையும், விஜேவுமான மகாலட்சுமியை தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் மகாலட்சுமி. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இவர், நிறைய நிகழ்ச்சிகளில் பணிபுரியத் தொடங்கி நிலையில், சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான ’வாணி ராணி’ சீரியல் மூலம் மகாலட்சுமியின் சின்னத்திரை பயணத்தில் மிக முக்கியமானதாக அமைந்தது. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்லமே, முந்தானை முடிச்சி, இரு மலர்கள், அவள் என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளரை மறுமணம் செய்த சீரியல் நடிகை மகாலட்சுமி..! திருப்பதியில் டும் டும் டும்..!

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமிக்கு அனில் என்பவருடன் ஏற்கனவே திருமணம் நடைபெற்று இருவரும் விவாகரத்துக்காக விண்ணப்பித்திருந்தனர். அப்போது, மகாலட்சுமி மீது பிரபல சீரியல் நடிகை ஜெய் ஸ்ரீ கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அதில் தன் கணவரும் நடிகருமான ஈஸ்வருக்கும், மகாலட்சுமிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இதனை மறுத்த மகாலட்சுமி ஜெய்ஸ்ரீயும், அனிலும் இணைந்து தனக்கு பிரச்சனை உருவாக்குவதாக விளக்கமளித்தார். இந்நிலையில், மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரை தற்போது திருமணம் செய்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளரை மறுமணம் செய்த சீரியல் நடிகை மகாலட்சுமி..! திருப்பதியில் டும் டும் டும்..!

திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்தது. ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி குடும்பங்களை சேர்ந்தவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரும் புதுமண தம்பதியரான ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமிக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ள ரவீந்தர், ”மகாலட்சுமி போல பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க… அந்த மகாலட்சுமியே வாழ்க்கைக்கு கிடச்சா?” என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே, ரவீந்தர் சந்திரசேகரன் தனக்கு வாழ்க்கைத் துணையாக கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய மகாலட்சுமி, வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.  

Chella

Next Post

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க புதிய திட்டம்; தமிழக அரசு..!

Thu Sep 1 , 2022
சென்னை, ரேஷன் அரிசி கடத்தலுக்கு முடிவு கட்ட பொது விநியோக திட்டத்திற்கு வழங்கப்படும் அரிசி மூட்டைகளில் க்யூ ஆர் குறியீட்டினை பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மற்றும் குறைந்த விலை அரிசி, சட்டவிரோதமாக பக்கத்து மாநிலங்களுக்கு கடத்தப்படுவது அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை தொடர்ந்து ரேஷன் அரசி கடத்தல்களை தடுக்கும் வகையில் தமிழக உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கும் […]

You May Like