திரையுலகை சேர்ந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். அதே போன்று வரியும் கோடிகளில் செலுத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அதிகம் வரி செலுத்தும் நடிகர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் 2024 நிதியாண்டில் அதிகம் வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் விபரம் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நட்சத்திரங்களின் பட்டியலை Fortune India வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் இடத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளார். வருமான வரியாக அவர் ஆண்டுக்கு 92 கோடி ரூபாய் செலுத்துகிறார். பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ள நடிகர் விஜய் ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் வருமான வரி செலுத்துகிறார். மூன்றாவது இடத்தில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான், வருமான வரியாக 75 கோடி ரூபாய் செலுத்துகிறார்.
நான்காவது இடத்தில் உள்ள நடிகர் அமிதாப் பச்சன், 71 கோடி ரூபாயும் ஐந்தாவது இடத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 66 கோடி ரூபாயும் வரிமான வரியாக செலுத்துகின்றனர். ஆறாவது இடத்தில் உள்ள பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், 42 கோடி ரூபாயும் ஏழாவது இடத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 38 கோடி ரூபாயும் வரிமான வரியாக செலுத்துகின்றனர். நடிகர் ரன்பீர் கபூர், 36 கோடி ரூபாயும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், 28 கோடி ரூபாயும் வரிமான வரியாக செலுத்துகின்றனர்.
Read more ; ஹரியானா தேர்தல்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரஞ்சித் சிங் சவுதாலா..!! என்ன விவகாரம்?