இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் ப்ரோமோவில், என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது.. என்ன மாதிரி கெட்டவளும் இந்த உலகத்தில இருக்க முடியாது” என போட்டியாளர் ஜனனி பேசியுள்ளார்.
தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து பழைய நிலைக்கு பிக்பாஸ் வீடு திரும்பியுள்ளது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ’நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த போட்டியை விளையாட மொத்தம் 19 பொம்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொம்மையிலும் ஒவ்வொரு போட்டியாளர்களின் பெயர் எழுதியிருக்கும். டால் ஹவுஸ் எனும் இடத்தில் 18 இடங்கள் மட்டுமே இருக்கும். போட்டியாளர்கள், கேம் துவங்கிய உடன், கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொம்மையை எடுத்து அந்த வீட்டிற்குள் வைக்க வேண்டும். வீட்டிற்குள் எந்த பொம்மை இடம் பெறவில்லையோ, அந்த பொம்மையில் இருக்கும் பெயர் கொண்ட நபர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.
முதல் ப்ரோமோவில், போட்டியில் இருந்து விளக்கப்பட்ட மணிகண்டன் செம டென்ஷனாகி “அவ்வளோ கண்ணுக்கு தெரிஞ்சும் என் பெயரை எடுக்காம விட்டுடீங்கள. நான் யாருனு நான் காட்டுறேன்” என்று காட்டமாக கூறினார். அடுத்து வெளியான ப்ரோவில், முதல் இருந்த பதட்டமான சூழ்நிலை சற்றே குறைந்தது. அதற்கு பின்னர், அந்த போட்டியில் இருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். அதில் “என்னுடன் நல்ல மாதிரியாக பழகினால் எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும். ஆனால் குற்றம் கண்டுபிடித்தால், என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது.. என்ன மாதிரி கெட்டவளும் இந்த உலகத்தில இருக்க முடியாது” என்று வில்லத்தனமாக பேசினார்.