#Tngovt: பள்ளிகளில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு…! தமிழக அரசு அட்டகாச அறிவிப்பு…!

2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ மேல்நிலைக்‌ கல்வி பயிலும்‌ விருப்பம்‌ உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கு தயார்‌ செய்யும்‌ வகையில்‌ பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்விஅலுவலர்கள்‌, கீழ்காணும்‌ அறிவுரைகளை மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌,மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கு வழங்கி செயல்படுத்துமாறு பள்ளிகல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு ரூ.25,000 வரை உதவித்தொகை..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! இன்றே கடைசி நாள்..!!

போட்டித்‌ தேர்வுகளுக்கு அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ 11ஆம்‌மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு நவம்பர்‌ மூன்றாம்‌ வாரத்திலிருந்து சனிக்கிழமைகளில்‌ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ உள்ள ஒன்றியங்களின்‌ எண்ணிக்கைக்கு ஏற்ப(ஒன்றியத்திற்கு ஒரு மையம்‌) என 412 பயிற்சி மையங்கள்‌ ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு நடைமுறையில்‌ உள்ளது.

மேற்கண்ட மையங்களிலிருந்து தமிழ்‌ வழி மற்றும்‌ ஆங்கில வழி பயிற்சி மையங்களை, அம்மாவட்டங்களில்‌ உள்ள மாணவர்களின்‌ பயிற்று மொழி தேவைக்கேற்ப தெரிவு செய்து கொள்ள வேண்டும்‌. போட்டித்‌ தேர்விற்குப்‌ பயிற்சி பெற விரும்பும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்கள்‌ 11ஆம்‌ வகுப்பில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையிலும்‌, (அதிகபட்சம்‌- 50மாணவர்கள்‌ ஒரு ஒன்றியத்திற்கு), 117 ஆம்‌ வகுப்பு மாணவர்கள்‌, 10 ஆம்‌ வகுப்பில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையிலும்‌ (ஒரு ஒன்றியத்திற்கு அதிகபட்சம்‌ 20 மாணவர்கள்‌) தெரிவு செய்யப்பட வேண்டும்‌.

Vignesh

Next Post

அடுத்த 3 நாட்கள் தொடர் கனமழை...! இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் எச்சரிக்கையா இருங்க...!

Sat Nov 5 , 2022
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like