காதலியின் பாய் பெஸ்டியை சுட்டுக் கொன்ற இளைஞர் – ஒரு தலை காதல் விவகாரத்தால் உத்தரபிரதேசத்தில் பயங்கரம்!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு தலை காதல் விவகாரத்தால் காதலியின்   நண்பர் ஒருவரை  இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் இந்து உரை சார்ந்தவர் ராகுல் வயது 23. அதே பகுதியைச் சார்ந்தவர் மோனிகா வயது 20 இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் ராகுல் மோனிகாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு மோனிகா சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ராகுல் அவரை தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் நடந்திருக்கின்றன. இந்நிலையில் மோனிகா வெளியூர் செல்வதற்காக ரயில் நிலையம் வந்திருக்கிறார். அங்கு வந்த ராகுல்  மோனிகாவிடம்  அவரது காதலை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கிறார். இதன் காரணமாக இதுவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது மோனிகாவுடன் அவரது கல்லூரி நண்பரான சங்கர் என்பவரும் உடன் இருந்திருக்கிறார். ராகுல் மோனிகாவை வழிமறித்து  வாக்குவாதத்தில் ஈடுபடுவதை கண்ட சங்கர் அவர்களிடம் சென்று  என்ன பிரச்சனை என்று கேட்டிருக்கிறார். மேலும் மோனிகாவை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வலியுறுத்தி இருக்கிறார். இது ராகுலுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனையில் சங்கர் தலையிட வேண்டாம் என ராகுல் எச்சரித்து இருக்கிறார். இதனை பொருட்படுத்தாத சங்கர்  தன் நண்பருக்காக  ராகுலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இந்த வாக்குவாதம் மோதலாக மாறி உள்ளது. இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து  சங்கரை  ராகுல் சுட்டுவிட்டார். அதன் பின் அந்தப் பகுதியில் இருந்து தப்பி சென்று விட்டார ராகுல்.

இந்நிலையில் குண்டடிபட்ட சங்கரை அங்கிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும்  பலனில்லாமல்  சங்கரின் உயிர் மருத்துவமனையில் பிரிந்துள்ளது. இந்த விஷயம் அறிந்து  மருத்துவமனை வந்த காவல்துறையினர்  இது தொடர்பாக வழக்கு பதிந்து  ராகுலை தேடி வருகின்றனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு  தீவிரமான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தற்போது உத்திர பிரதேசம் போன்ற பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது வேதனை அளிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரு தலை காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை மச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Baskar

Next Post

'சாமிக்கு மாலை போட்டு விட்டு குடிக்கலாமா'? என கேட்ட தாய் பீர் பாட்டிலை உடைத்து குத்திய மகன்!

Fri Feb 10 , 2023
பக்தி விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்கச் சொன்ன  தனது தாயை  மகன் குத்திக் கொன்ற சம்பவம்  சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வியாசர்பாடி பதினொன்றாவது தெருவை சார்ந்தவர் அப்பனு வயது  51  இவருக்கு திருமணம் ஆகி கண்ணகி என்ற மனைவியும்  அஜய் மற்றும் அமலா என்ற  இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் அமலாவுக்கு திருமணம் ஆகிய அவர் கணவருடன் வசித்து வருகிறார். மகன் அஜய் ரயில்வே துறையில்  ஒப்பந்த பணியாளராக […]

You May Like