திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

நகைச்சுவை நாயகனுக்கு பிறந்தநாள் இன்று…!

வடிவேலு என்னும் ‘இம்சை அரசன்’…

vadivelu

நேசமணியை நேசிக்காமல் தமிழகத்தில் ஒருவரும் இருக்க முடியாது. காலை கண்விழுத்தது முதல் இரவு தூங்கும் வரை மீம்ஸ்களாக, பேசும் போது வசனங்களாக, டிவியில் நகைச்சுவை நடிகராக என நம்வீட்டில் ஒரு நபராகவே வாழ்கிறார் வடிவேலு என்னும் இம்சை அரசன். அவரது பிறந்தநாளான இன்று அவரை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இம்சை அரசனின் திரைப்பயணம் :

hqdefault Le7sQ8Z

கருப்பு நாகேஷ், சிவாஜி, வைகைப் புயல் என்று பல அடைமொழியோடு வலம் வருபவர் தான் வடிவேலு. தமிழ் சினிமாவில் நாயகன், நகைச்சுவை, குணச்சித்திரம் என விரல் விட்டு எண்ணிவிடும் அளவிற்கு ஒரு சிலரே ஜாம்பவான்களாக திகழ்கின்றனர். அதில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நாயகர்கள் என்று பார்க்கும் போது வடிவேலுவை முன்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். காரணம், அவரின் முகத்தோற்றம் மட்டுமல்ல, உடல் மொழியும், வசன உச்சரிப்பும் மேலதிகமாகச் சேர்ந்து நம்ம வீட்டு பிள்ளை ஆகி விடுகிறார்.

hqdefault

டி.ராஜேந்தரின் என் தங்கை கல்யாணி படத்தில் யாருமே அடையாளம் கண்டிராத சிறு வேடத்தில் நடித்திருந்தார் வடிவேலு. பின்னர் சில வருடங்கள் கழித்து ராஜ்கிரண் தயாரித்து நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் அனைவரையும் சிரிக்க வைத்து தன் பயணத்தை தொடங்கினார். அதன்பின் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வடிவேலுவின் இன்னொரு பக்கத்தை கண்டறிந்தார். சின்னக் கவுண்டர், தேவர் மகன் என இவர்கள் கூட்டணி செம தூளாக அமைந்தது.

maxresdefault 2 1

பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே படத்திற்குப் பின் அவரை ஒட்டுமொத்த திரையுலகமும் கொண்டாடியது. விரலுக்கேத்த வீக்கம், மிடில் கிளாஸ் மாதவன் போன்ற பல படங்களில் நகைச்சுவை மூலம் மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் இவர்.

images 2 1

சுந்தர்.சி படத்தில் எப்போதும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. கவுண்டமணியாக இருந்தாலும் சரி வடிவேலுவாக இருந்தாலும் சரி அவரிடம் சிக்கினால் சின்னாபின்னமாகித்தான் போவார்கள். ஆம் வடிவேலுவும் கைப்புள்ளையாக, நாய் சேகராக நம் வாழ்க்கையையும் சேர்த்து சின்னாபின்னமாக்கினார்கள் என்றால் அது மிகையல்ல. தினமும் ஒரு முறையாவது கைப்புள்ளைக்கு கட்டம் சரி இல்லை, த்ரிஷா இல்லனா நயந்தாரா போன்ற வசனங்கள் வெறித்தனம்.

hqdefault 1 1

வடிவேலு தொண்ணூறுகளில் பிரபல நட்சத்திரமாக மாறிய போது இசைஞானி இளையராஜா இசையில், கவிஞர் வாலி கதை எழுத இளையராஜாவின் மோதிரம் என்ற படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருந்தார். என்ன காரணமோ ஏனோ அது கிடப்பில் போடப்பட்டு விட்டது. அது மட்டும் வந்திருந்தால் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசிக்கு முன் பல படங்களில் ஹீரோவாக தொடர்ந்திருப்பார் வடிவேலு. முன்னணி ஹீரோக்கள் அனைவரும் தங்கள் படங்களில் நாயகிகளை புக் செய்வதற்கு முன் வடிவேலுவை தான் முதலில் புக் செய்வார்கள். சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் வடிவேலுவின் கால்ஷீட் கிடைக்கும் போது ஷீட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என கூறியதாக சொல்லப்படுவதுண்டு.

விஜய் – வடிவேலு கூட்டணி :

maxresdefault 3

வடிவேலு, விஜய் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். சச்சின், போக்கிரி, பகவதி, காவலன் , வில்லு என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். விஜய்யை போல நடிகர் பார்த்திபன், வடிவேலு கூட்டணியும் களைகட்டும். வெற்றி கொடி கட்டு, குண்டக்க மண்டக்க, பாரதி கண்ணம்மா என பல படங்களில் இவர்கள் நடித்துள்ளனர். திரையில் இவர்களை பார்த்தாலே சிரிப்பு சரவெடி தொடங்கிவிடும்.

பாடகர் வடிவேலு :

0f05c5cd839d0011391a296cdd842edd

இசைஞானி இளையராஜா இசையில் எல்லாமே என் ராசா தான் படத்தில் “எட்டணா இருந்தா எட்டூரும் எம் பாட்டைக் கேட்கும்” என்ற பாடலை வடிவேலு முதன்முதலில் பாடினார். அதன்பின் பல பாடல்களை பாடியுள்ளார் வைகைப்புயல். பல ஹீரோக்களுடன் சேர்ந்தும் பாடியுள்ளார்.

அரசியல் களவரம் :

vadivelucampaign

2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது திமுகவிற்கு ஆதரவாக மைக்கை எடுத்தார் வடிவேலு. அதிமுக மீதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதும் சீறிப் பாய்ந்தார் அவர். அனல் பறக்கும் பிரச்சாரங்கள், மேடைப்பேச்சுகள் என சினிமாவில் இருந்து அரசியலில் கால் பதிக்க நினைத்த அவருக்கு நிச்சயம் அதன்பிறகு தன் நிலை மாறும் என தெரிந்திருக்காது. அந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதன் பின் காணாமல் போனார் வடிவேலு. பல ஆண்டுகளாக எந்த படத்தில் நடிக்கவில்லை. அவரது கம்பேக்கை எதிர்நோக்கி காத்திருந்தது தமிழ் திரை உலகம். அதன் பின் மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின் தெனாலிராமன் படம் மூலம் மக்களை மகிழ்விக்க ஆரம்பித்தார். எலி, கத்திச்சண்டை, சிவலிங்கா, மெர்சல் என தமிழ் சினமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். வருடம் 10 படங்களுக்கு மேல் நடித்து வந்த வடிவேலு கடந்த பத்தாண்டுகளில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

vadiveluforlife :

vadivelu collage

வடிவேலு படங்களில் நடிக்க மறந்தாலும், அவரை 90’ஸ் கிட்ஸ்கள் முதல் 2 கே கிட்ஸ்கள் வரை தினம் தினம் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மீம்ஸ்களின் வழியே நம்முடன் பயணிக்கிறார் இந்த நேசமணி. சமீபத்தில் சேவ் நேசமணி என்ற ஹேஷ்டேக் உலகம் முழுவதும் பிரபலமானது அனைவரும் அறிந்ததே. அதேபோல வடிவேலு பார் லைப் என்ற ஹேஷ்டேக் தினமும் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது.

RS Vadivelu 1

59 வயது ஆனாலும், எப்படி ஒரு மனிதர் இத்தனை சிறப்புடன் இருக்க முடியும் என சிலிர்ப்பூட்டும் வகையில் திகழ்கிறார் வடிவேலு. எளிமை, தன்னடக்கம் என குணத்திலும் அவர் நம்பர் ஒன் தான். காலம் மாறிப் போச்சு, தவசி, வெற்றிக் கொடி கட்டு போன்ற படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை கலைஞன் விருதையும் பெற்றிள்ளார் இவர். தமிழ் சினிமா நகைச்சுவையில் நாகேஷ், கவுண்டமணி வரிசையில் மிகவும் தனித்துவமானவர் வடிவேலு. அவரை கொண்டாட பிறந்தநாள் மட்டும் காரணமல்ல. அவரே கொண்டாடப்பட வேண்டிய மகா கலைஞன் தான்.

#வீ லவ் யூ வடிவேலு….

Newsnation_Admin

Next Post

தமிழ் திரையுலகின் நிஜ 'ராட்சசி'

Thu Oct 10 , 2019
தமிழ் சினிமா துறையில் கொடிகட்டிப் பறந்த ‘ஆச்சி’ மனோரமா அவர்களது வாழ்க்கையில் சினிமா எனும் அத்தியாயம் மிகவும் அசாத்தியமானது. மனோரமாவாக மாறிய கோபிசாந்தா ‘வின்’ கதை…! மன்னார்குடியைச் சேர்ந்த காசி கிளக்குடையார் – ராமமிர்தம் தம்பதியருக்குப் பிறந்தவர்தான் கோபிசாந்தா. குடும்ப பிரச்னை காரணமாக கணவனை பிரிந்து காரைக்குடியில் உள்ள பள்ளத்தூர் என்ற கிராமத்துக்கு குடி புகுந்தார் ராமமிர்தம். கோபிசாந்தா தன்னுடைய பள்ளிப்படிப்பைப் பள்ளத்தூரில் தான் தொடங்கியுள்ளார். அவர் சிறு வயதில் […]
26 manorama 600

You May Like