#Breaking : காமன்வெல்த் போட்டி.. தமிழக வீராங்கனை நீக்கம்.. இதுதான் காரணம்..

காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி வரும் 28-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.. 215 வீரர்கள் இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.. இதில் 36 பேர் மட்டுமே தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.. இந்நிலையில் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. காமன்வெல்த் போட்டிக்கான 100 4×100 மீட்டர் ஓட்டப்பந்தய அணிக்கு தனலட்சுமி தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் நீக்கப்பட்டுள்ளார்.. தனலட்சுமி நீக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Maha

Next Post

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்.. சொத்து, ஆவணங்கள் சரிபார்ப்பு...

Wed Jul 20 , 2022
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில், அவரது சொத்து, ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.. கடந்த ஆண்டு டிசம்பவர் மாதம், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத 2.16 கோடி பணம், வங்கி லாக்கர் சாவிகள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் […]

You May Like