மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் கட்டாயம்..! இல்லையென்றால், பயணிக்க அனுமதி மறுப்பு..!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,743 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 90 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,062 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டில் 403 பேருக்கும், கோவையில் 127 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

Chennai Metro invites tender to procure 70 driverless train-sets for  Phase-2 - Metro Rail News

இதேபோல் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுஇடங்களில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநகரப் பேருந்துகளில் முகக்கவசம் அணிந்து பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போதும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு பயணம் மறுக்கப்பட்டு வரும் நிலையில், அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இரட்டை இலை சின்னம் முடக்கம்..! வழக்கு தொடர்ந்த முன்னாள் உறுப்பினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்..!

Thu Jul 7 , 2022
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி வழக்கு தொடர்ந்த அதிமுக முன்னாள் உறுப்பினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி ரூ.5 ஆயிரம் கோடி […]

You May Like