”ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது”..!! கடுமையாக சாடிய பிரதமர் மோடி..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. மறுநாள் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்றினார். இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி மாநிலங்களவையில் பதில் அளித்தார்.

அதில், ”நாட்டின் நிலத்தின் பெரும் பகுதியை எதிரிகளிடம் ஒப்படைத்த காங்கிரஸ், நாட்டின் ராணுவத்தை நவீன மயமாக்குவதை தடுத்து நிறுத்திய காங்கிரஸ், இன்று தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பேசுகிறது. காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷின் ‘தென்னிந்தியாவுக்கு தனி நாடு’ என்ற கருத்துக்கு பதிலளித்த பிரதமர் மோடி,”வடக்கு-தெற்கு” பிரிவினையை உருவாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, பழைய கட்சியை கடுமையாக சாடினார்.

காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை கொன்றது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கலைத்த அந்த கட்சி நாட்டை பிளவுபடுத்தும் கருத்துக்களை முன் வைத்து வருகிறது. நாட்டை உடைக்க முயற்சிப்பவர்களுடன் காங்கிரஸ் இணைந்துள்ளது. இப்போது தெற்கை உடைப்பது பற்றி பேசுகிறது. டாக்டர் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க காங்கிரஸ் கருதவில்லை என்றும், கட்சி “குடும்ப உறுப்பினர்களுக்கு” பாரத ரத்னா விருதை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது. காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் பெறாது என மேற்கு வங்கத்தில் இருந்து உங்களுக்கு ஒரு சவால் விடப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் 40 இடங்களை பெற வேண்டும் என நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.

1newsnationuser6

Next Post

"அவங்க திறக்கலாம்.. நாங்க பூட்டியாச்சு.." பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!

Wed Feb 7 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் வியூகங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது . இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று வந்த அதிமுக அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியதோடு பிஜேபி கட்சியுடன் உறவையும் முறித்துக் கொண்டது. இனி எந்த காலத்திலும் பிஜேபியுடன் கூட்டணி இருக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் […]

You May Like